இந்தியாவில் வளருது இன்ஸ்டாகிராம்!



இந்தியா என்பது மிகப் பெரிய சந்தை நாடு என்பதை சமூக வலைத்தளங்களும் நிரூபித்துள்ளன. ஆம்… இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் ஃபேஸ்புக்கின் அங்கமான இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை 7 கோடியே 74 லட்சத்திலிருந்து, 13 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 66% அதிகம்.

சீன மென் பொருளான டிக் டாக் தடைசெய்யப்பட்ட பின்னரே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க ‘இன்ஸ்டாகிராம் லைட்’ என்ற மினி வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. மெதுவான நெட்வொர்க்கிலும், குறைந்த செயல்திறன் கொண்ட ஃபோன்களிலும் இது நன்றாகச் செயல்படும்.  

ஷாப்பிங், இ- காமர்ஸ் போன்று பணம் சம்பாதிப்பதற்கும், பொருட்களை வாங்க, விற்கவும் எளிதான ஒரு வழியினை இன்ஸ்டாகிராம்  உருவாக்கிக் கொடுக்கிறது. பெரிய அளவில் விளம்பரங்களுக்கு பணம் செலவு செய்ய முடியாதவர்கள் இந்தத் தளத்தினை இலவசமாகவும், paid promotion வழியாகவும் பயன்படுத்துகின்றனர். அதேநேரம் சில பிரபலங்கள் தங்கள் பக்கத்தில் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விளம்பரப்படுத்த ஒரு பெரிய தொகையை வாங்குகிறார்கள்!   

அன்னம் அரசு