close up - இளையராஜா



பெயர்: இளையராஜா (பஞ்சு அருணாசலம் வைத்த பெயர்).

அம்மாவுக்கு மட்டும்: ராசய்யா.

ஒரிஜினல் நேம்: ஆர்.ஞானதேசிகன், ராசய்யா.

ரசிகர்களுக்கு: ராஜா, ராகதேவன், இசைஞானி, மேஸ்ட்ரோ.

பிறந்த தேதி: 03.06.1943.

பிறந்த இடம்: பண்ணைபுரம், தேனி.

ராசி: மிதுனம்.

மனைவி பெயர்: ஜீவா (சொந்த அக்காவின் மகள்).

கர்நாடக இசை குரு: டி.வி. கோபாலகிருஷ்ணன்.

வாத்தியக் கலைஞராக பணி: சலீல் சௌத்ரியிடம்.

கோல்டு மெடலிஸ்ட்: லண்டன் டிரினிடி இசைக்கல்லூரியில் வெஸ்டர்ன் ஆர்ட் மியூசிக்கில் டிகிரி. கிளாசிகல் கிடாரில் தங்க மெடல் வாங்கியவர்.

விருதுகள்: பத்மவிபூஷண் (2018). பத்மபூஷண் (2010).

அறிமுகம்: தமிழில் ‘அன்னக்கிளி’.

கதை கேட்காமல் சிச்சுவேஷன்களை மட்டும் கேட்டு பாடல்கள் கொடுத்த படம்: ‘கரகாட்டக்காரன்’.

அடுத்து: 20க்கு மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

‘நத்திங் பட் விண்ட்’ ஆல்பத்தில் இருந்து உருவான பாடல்: ‘வலையோசை கலகல...’

ஆல்பங்கள்: ‘How to name it’, ‘Nothing but wind’.

உடன்பிறப்புகள்: பாவலர் வரதராஜன், பாஸ்கர், அமர்சிங் (கங்கை அமரன்), கமலாம்மாள், பத்மாவதி.

படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்கள்: பாவலர் கிரியேஷன்ஸ், ராஜா கிரியேஷன்ஸ்.

நூறுக்கும் மேலான வாத்தியங்கள் பயன்படுத்திய பாடல் (137): ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி...’

அதிக தடவை பார்த்து ரசித்த படம்: ‘Amadeus’.







மை.பாரதிராஜா