வலைப்பேச்சு



@Smilkiller1 - யாரிடமும் அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது. கடைசியில் உரிமை வன்முறையாக மாறி விடும்...

@erode_kathir - சூழல்கள் அமையாததால் பல மாதங்களாக தொடர்பில் இல்லாத, இன்னும் சொல்லப்போனால் ஓராண்டுக்கு மேல் தொடர்பில்
இல்லாமல் போன, ஒருகாலத்தில் தினசரி சந்தித்து மகிழ்ந்திருந்த நட்புகளை திடீரென அழைத்துப் பேசுகிறேன்.கால இடைவெளி யாவும் சில விசாரிப்புகளில் நிரம்புகின்றன!

@venkime1 - ஒரு வண்டியோட ஸ்பீட நிர்ணயம் பண்ணுறது அது போகுற வேகத்துல இல்லை; என்ன வேகத்துல ப்ரேக் நிக்கும்ங்கறதுதான். சின்னப்பசங்க காஸ்ட்லி பைக்க வாங்கி ஆக்சிடண்ட் பண்ணுறது இது தெரியாமத்தான். RXலாம் 65க்கு மேல ப்ரேக் ஜீரோ. ஆண்டவன்தான் காப்பாத்தணும்...

@iamsathishvarun -  நமக்கு கிடைக்காது என ஒதுங்கிப் போவது தான் நீ இந்த வாழ்க்கையில் எடுக்கும் மோசமான முடிவு...

@sankariofficial - உன் வளர்ச்சி யைப் பார்த்துப் பிரமிப்பவர்களே உன்னை விமர்சிப்பவர்கள்...

@vandavaalam_ - #TenetDoubts ஒருத்தன turnstile machine உள்ள போட்டு இன்வர்ட் ஆகி வெளிய வரும்போது, அவன் ரிவர்ஸுல செய்யுற விஷயம் எல்லாமே ஏற்கனவே நடந்ததா? அவன் அனுமதி இல்லாமலே ஆட்டோமேட்டிக்கா எல்லா நிகழ்வும் நடக்குமா?
@s_for_sound Replying to @vandavaalam_ - நடக்கும்...

@vandavaalam_ Replying to @s_for_sound - என்ன ஒரே வார்த்தையில முடிச்சிட்டீங்க..?
@s_for_sound - ஏன்னா... இன்னும் படம் பார்க்கல... ரொம்ப நேரமா reply இல்லாம இருந்துச்சா... சரி ஒண்ண போட்டு விடுவோம்னு போட்டேன்!

@pencil_tweets -  ஊர்ல இருக்கவன் பூரா மன்னர் பரம்பரை, மன்னர் பரம்பரைன்னு சொல்றதை பார்த்தா நம்மூரு மன்னருங்க எல்லாம் போர்க்களத்தில் இருந்த நேரத்தை விட அந்தப்புரத்தில் இருந்த நேரம்தான் அதிகமா இருக்கும் போல!

@skpkaruna - ஜனநாயக நாடுகளில் ஆளும் கட்சியைத் தோற்கடிக்கத்தான் கூட்டணி, வியூகம் எல்லாம் அமைப்பார்கள்!
உலகிலேயே, ஓர் எதிர்க்கட்சியைத் தோற்கடிக்க, மாநில ஆளும் கட்சி, மத்திய ஆளும் கட்சி, சாதிக் கட்சிகள், நடிகர் கட்சிகள் என பலவிதமாக அணி சேருவதாக ஒப்புக் கொள்ளும் கொடுமையை இங்குதான் காண முடியும்.

@சசி தரணி - ஆயிரத்தெட்டு கமிட்மெண்ட்ட மண்டைல போட்டுத் திரியற ஆட்கள்தான் இந்த ஆம்பளைங்க... ஆனாலும் அவங்களுக்கான நேரமோ, நாளோ அவங்களுக்கு இருக்கு... கொறஞ்சபட்சம் சரக்கடிக்கற நேரமாவது அவங்களுக்குனு இருக்கு...ஆனா, இந்த பொம்பளைங்களுக்கு தனக்கான நேரம் நாளுனு ஒண்ணுமே இல்லல...

@Paadhasaari Vishwanathan-  ‘மனசாட்சிப்படி நடப்பேன்...’ - என்று நீ கூறுவாயானால், அது மனிதகுல அறத்தின் சாட்சியாகக் கொள்ளவேண்டும். நமக்கேது தனித் தனி மனசாட்சி!

@oorkkavalaan - ஊரையே ‘கொளுத்தும்’ திறமை தன் ‘உள்ளே’ இருந்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறது ‘தீப்பெட்டி...’

@இந்திரா கிறுக்கல்கள் - பேருந்தில் ஏறியதிலிருந்தே அவன் முகம் வாடினது போலத்தான் இருந்தது. பக்கவாட்டு இருக்கையில் மத்திம வயதுக்காரனொருவன் கோபமாகவோ சோகமாகவோ வசீகரமாகவோ இருந்தால் தாங்கமுடியுமா என்ன?! அவ்வப்போது கைபேசியை எடுத்துப்
பார்த்துக் கொண்டிருந்தவன் பொறுமையிழந்தவனாய் காதில் வைத்தான்.

‘‘இப்ப எதுக்கு மூஞ்சியைத் தூக்கிட்டு இருக்க?’’
கண்டிப்பாக எதிராளி பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பது புரிந்தது.‘‘எதுக்கு இப்ப அழற?’’பதிலுக்காக அல்லது அழுகை நிற்பதற்காகக் காத்திருந்தான்.அவனது மீசை, மேலுதட்டை மறைத்திருந்தது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

‘‘சரி போய் சாப்பிடு...’’
கோபம் இப்போது சமாதானமாக மாற ஆரம்பித்திருந்தது. நிச்சயம் அவள் பிடிவாதம் பிடித்திருக்க வேண்டும்.
‘‘சொல்றேன்ல, போய் சாப்பிடு...’’போனை வைத்தவன், சிறிது நேரத்திற்கு திரையையே பார்த்துக்கொண்டிருந்தான். தாடியோடு நன்றாகத்தான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் போனை காதில் வைத்தான்.

‘‘சாப்பாடு போட்டுட்டு தட்டோட எனக்கு செல்ஃபி அனுப்பு...’’
மறுத்திருப்பாள் அல்லது சமாளித்திருப்பாள்.‘‘சொல்றேன்ல, சாப்பிடுறதை செல்ஃபி எடுத்து அனுப்பு...’’
‘‘...’’‘‘சரி.. எடுத்தனுப்பு...’’கண்ணைத் துடைத்தபடியே சரியென்றிருப்பாள் போல.

‘‘இப்ப கட் பண்ணி ரெண்டு நிமிசத்துல எனக்கு போட்டோ வரணும். சொல்லிட்டேன்...’’
கட் செய்தவன், போட்டோவுக்காகக் காத்திருந்தான். அவன் முகமலர்ச்சியை எதிர்பார்த்திருந்தேன்.சரியாக ஒரு நிமிடம் இருபத்தி எட்டாவது விநாடியில் அவனது புருவம் விரிந்ததில், இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

போன் செய்து ஐ லவ் யூ சொல்வானென எதிர்பார்த்த பக்கத்து இருக்கைக்காரிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது போல, பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.கோபமாய் இருக்கும் சமயத்தைவிட, சமாதானப்படுத்திய நிம்மதியில் ஆண்கள் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறார்கள்.
போனை காதில் வைத்தேன்.

‘‘ஒரு போன் செஞ்சு சாப்பிட்டியானு கேக்கக்கூட ஆளில்ல ரேவா...’’
‘‘ஏன் சாப்பிடலியா?’’
‘‘ரெண்டு இட்லி, ஒரு தோசை...’’‘‘த்தூ!’’


@Tk Kalapria - பொம்மை தொலைந்துவிட்டதென நம்பிய குழந்தை போல தூங்குகிறாள். ஒளித்து வைத்தவன் போல விழித்துக் கொண்டிருக்கிறேன்...

@Pa Raghavan - நேற்று என் மகளுடன் கிறிஸ்டோஃபர் நோலனின் Tenet பார்த்தேன். நோலனுக்கு இந்தப் படத்துக்கான இன்ஸ்பிரேஷனே கே.எஸ்.ரவிக்குமார் எடுத்த ‘மன்மதன் அம்பு’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நீலவானம்...’ பாடலில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று சொன்னால் முறைக்கிறாள். நல்லதுக்கே காலமில்லை!

@jay_archu - ஆகச்சிறந்த மரியாதை என்பது, வீட்டுக்கு விருந்தினர் வந்தவுடன் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு  
அவருடன் உரையாடுவதே!

@soundhari_twitz - அழுக்குப் படியாமல் இருக்க சில இதயங்களை அன்பால் அழகுபடுத்திக்கொண்டே இருங்கள்...

@fazzz_7- வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்... ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்...

@ItsJokker - தங்களுக்கு வெற்றி கிடைத்தால் அதற்குக் காரணம், ‘விடாமுயற்சியும், கடின உழைப்பும்’.அடுத்தவர்களுக்குக் கிடைத்தால் அதற்குக் காரணம், ‘அதிர்ஷ்டமும், நேரமும்’.

@i_akaran - பாதையில் தடைகள் இருந்தால் தகர்த்து எறிந்துதான் போகணும்னு இல்ல; ஓரமா ஒதுங்கிக் கூட போகலாம்..!

@wattaman4 -  நமக்கென்று ஓர் அடையாளம் தேவை. நாம் தொலைந்து விடாமல் இருக்க அல்ல... மற்றவர் நம்மை மறந்துவிடாமல் இருக்க!

@Navanee_Arash - தனிமையில் வரும் கண்ணீர் என்பது இதயம் சொல்ல முடியாத வார்த்தைகள்...

@AnjaliTwitz - அதிகம் யோசிக்காதே... கற்பனையிலேயே வாழ்க்கை முடிந்துவிடும்...

@Kannan_Twitz - நினைவுகளின் பெருமூச்சு ஆகச்சிறந்த ஆசுவாசம்...