Data Corner
*15% இந்திய கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே இணையம் அணுகும் வாய்ப்புள்ளது. *2002 - 03ம் ஆண்டில், மிகப்பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வருமானமானது, மிகச்சிறிய நிலம் வைத்திருப்பவர்களின் வருமானத்தைவிட, 2012 - 13ம் ஆண்டில் ஏழு மடங்கிலிருந்து ஒன்பது மடங்காக உயர்ந்துள்ளதாக 2015ம் ஆண்டு நபார்டு ஆய்வு காட்டுகிறது.
*100 கோடி மக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக வறுமையால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐநா தெரிவித்துள்ளது.
*10 - 15% வரை கொரோனா பொதுமுடக்கத்தின் போது இந்தியாவில் ஆன்லைன் மூலமாக Sex Toys விற்பனை அதிகரித்துள்ளது.
*479% கட்டண உயர்வை கடந்த பத்து ஆண்டுகளில் பஞ்சாப் அரசு மருத்துவக்கல்லூரிகள் கண்டுள்ளன.
*11.6% பார்வையாளர்கள் porn சைட்டுகளில் முதன்மையானதான Pornhubல் கூடியுள்ளனர். தினம் 120 மில்லியன் பார்வையாளர்கள் என்றிருந்த நிலையில் இப்போது 134 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
*2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் 17.6 % மலேரியா பாதிப்பு குறைந்துள்ளதாகவும் அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில் மலேரியா பாதிப்பு குறைந்து வரும் ஒரே நாடு இந்தியா என்றும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மலேரியா அறிக்கை 2020 குறிப்பிடுகிறது.
*8848.86 மீட்டர் - சீனாவுடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்துள்ளது நேபாளம்.l
அன்னம் அரசு
|