HOT கிசுகிசு
பணம் கரைந்தும் பதவி நஹி!
சம்பந்தப்பட்டவருக்கு கொரோனா பாதிப்பு. அதனால், தான் நிற்கவேண்டிய சங்கத் தேர்தலில் முன்னாள் நண்பரான ஹீரோவின் அப்பாவை நிற்க வைத்தார். அவரும் ரைமிங்கான பேச்சில் கூட்டத்தை சேர்க்க முயற்சித்தார். எதுவும் எடுபடாததால், இன்னொரு பக்கம் ‘எவர் வீட்டு காசையோ’ கொட்டியும் பார்த்தார். எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இப்போது கூட்டம் கூட்டமாக கொத்து பரோட்டாவை சாப்பிட்டபடி அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என ப்ளான் போட்டு வருகிறார்களாம்.
ஹீரோ போட்ட கண்டிஷன்!
நூறுநாள் வேலைவாய்ப்பில் பிசியான ஹீரோ அடுத்து ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார். அந்த இளம் இயக்குநர் இயக்குகிறார். கதைக்கான ஸ்டார் காஸ்ட்டில் இயக்குநர் சில பெயர்களைப் பட்டியலிட, ‘சபாஷ்’ சொன்ன ஹீரோ, அத்தனை பேரையும் கதைக்குள் கொண்டு வர சிக்னலும் கொடுத்தார் - சின்ன கண்டிஷனுடன்!
‘அவங்க மார்க்கெட்ல வாங்குற பேமென்ட்டைவிட நாலு மடங்கு கம்மியா பேசிப் பாருங்க. நம்ம பேனர்ல நடிக்கறதே அவங்களுக்கு பெருமையான விஷயம். படியாதவங்க, பட்டியல்ல இருக்கணும்னு அவசியமில்ல...’
- கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாராம் ஹீரோ கம் புரொடியூசர். நம்பர் ஒன் ஆக வர நடிகை வழங்கிய பணம்!
அறிமுகப் படம் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் இளசுகளிடம் ரீச் ஆகிவிட்டார் நடிகை. அடுத்தும் ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் சென்னை வந்த நடிகை, தன் மேனேஜர்களைக் கூப்பிட்டு, ‘அடுத்த ஆண்டில் நம்பர் ஒன்னாக நான்தான் பெயரெடுக்கணும். டாப் ஹீரோக்கள் படங்கள் அத்தனையிலும் என் கொடிதான் பறக்கணும்... அதுக்கான வேலைகளை ஸ்டார்ட் பண்ணுங்க...’ என உத்தரவிட்டதுடன் நியூ இயர் செலவுக்கும் கத்தையாக பணத்தைத் திணித்து அவர்களை அனுப்பி யிருக்கிறாராம். இதற்கு பெயர்தான் மாஸ்டர் மைண்டா?!
3.5 சி!
தமிழில் அறிமுகமானாலும், டோலிவுட்தான் அவருக்கு கைகொடுத்து டாப் ரேஸில் ஓட வைக்கிறது. சமீபத்தில் நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். அவரை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வரலாமென எண்ணிய ஓர் இயக்குநர், நடிகைக்கு போன் செய்து கால்ஷீட் கேட்டார். நடிகையோ, ‘வெல்... பட்...’ என சிம்பிளாக சொன்னதோடு தன் பேமென்ட் விஷயத்திற்குள் வந்தார். அங்கே அவரது சம்பளம் ‘3 சி’யை நெருங்குகிறது. அது உண்மையும் கூட! ‘அதைவிட, ‘அரைசி’ யாவது அதிகம் கொடுப்பதாக இருந்தால் சொல்லுங்கள். உங்கள் லாங்குவேஜுக்கு வர்றேன்....’ எனச் சொல்லவும், இயக்குநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது!
ஷியஸ்
|