விஜய் பட ஹீரோயின்!
முதன் முதலாக தமிழில் அறிமுகமாவதால், மகிழ்ச்சியில் பூரிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மிஞ்சும் கண்கள்... கொஞ்சும் உதடுகளுடன் திரையில் டபுள் ஹோம்லியாக புன்னகைக்கும் பூங்கொத்து. மகேஷ்பாபுவின் ‘சரிலேறு நீகேவரு’வில் சிறகடிக்கும் போதே, அவர் கோலிவுட்டுக்கு வருகிறார் என இங்கே சலசலப்பு. ஆனால், பேபியோ, நோ டென்ஷன் ட்ராஃபி.
‘‘சின்ன வயசில சென்னையில் இருந்திருக்கேன். அப்புறம் பெங்களூருவுக்கு ஷிஃப்ட் ஆனோம். ஸோ, தமிழ்ல படங்கள் பண்ண ஆவலா இருக்கேன். நிறைய கதைகள் வருது. ஆனா, நல்ல கதைக்காக வெயிட்டிங்...’’ கண் சிமிட்டுகிறார் ராஷ்மிகா. சொன்னபடியே பக்காவாக கதை அமைய, கார்த்தி ஜோடியாக ‘சுல்தானி’ல் கமிட் ஆகி நடித்துவிட்டார். இப்போது அல்லு அர்ஜுன் தமிழுக்கு வரும் ‘புஷ்பா’வில் பரபரக்கிறார். 2020ல என்ன ரெசல்யூஷன்ஸ் ப்ளான் பண்ணியிருந்தீங்க..?
2019ல நிறைய ரெசல்யூஷன்ஸ் வச்சிருந்தேன். அதுக்கான வேலைகள் ஒவ்வொண்ணா செயல்படுத்த முயற்சி செஞ்சேன். கொரோனாவால எல்லாமே அப்படியே நிக்குது. ஸோ, இந்த வருஷம் எந்த ரெசல்யூஷனும் இல்ல. கிரிக்கெட் பிடிக்குமா?
இப்ப பிடிச்சிருக்கு! சின்ன வயசுல கிரிக்கெட்னா ‘வேணாம்பா’னு கையைத் தூக்கியிருக்கேன். ‘டியர் காம்ரேட்’ படத்துக்காக கிரிக்கெட்டை கத்துக்க வேண்டிய சூழல். பிராக்டீஸ் அப்பதான் இந்த விளையாட்டுல எவ்வளவு ரிஸ்க்குனு தெரிஞ்சது. டஃப் கேம்தான். பட், இப்ப விளையாடுவேன்!உங்க லைஃப் பார்டனர் எப்படிப்பட்டவரா இருக்கணும்..?
இது ரொம்ப பர்சனல் ஆச்சே! பட், கேட்டுட்டீங்க... சொல்றேன். ‘எனக்கு வரப்போறவர் இப்படித்தான் இருக்கணும், அப்படித்தான் இருக்கணும்... இவ்ளோ தகுதிகள் இருந்தாகணும்’னு லிஸ்ட் போடமாட்டேன். சிம்பிளா சொல்லணும்னா, எனக்கு அவர் குட் பர்சனா ஃபீல் தரணும். அந்த ஒரு குவாலிஃபிகேஷன் போதும். வரப் போறவர் பெரிய கோடீஸ்வரனாவோ இல்ல நார்மல் பர்சனாவோ இருக்கட்டும். அவரைப் பார்த்தா மனசும் கண்ணும் மலரணும்!
டோலிவுட்ல டாப் ஹீரோக்கள் படங்கள்ல எல்லாம் நீங்க எப்படி..? அதான் எனக்கும் தெரியல! நடிக்க வந்த புதுசுல கொஞ்சமா பெயர் சம்பாதிச்சேன். கொஞ்சமா டேலன்ட் இருக்குனு நம்ப வைச்சிருக்கேன். இதுக்குமேல நான் எதுவும் செய்யல. பட், கதையை செலக்ட் பண்ணி பண்றேன். கதை கேட்காம கமிட் ஆகறதா இருந்தா, அடுத்து ரெண்டு வருஷங்களுக்கு என் கால்ஷீட் ஃபுல் ஆகியிருக்கும். அப்படியில்லையே!உங்களப் பத்தி நீங்களே ஒரு வதந்தி பரப்பலாம்னா... என்ன பரப்புவீங்க?
இது நல்லா இருக்கே! ரூமர்தானே... பண்ணிட்டாப் போச்சு! அடுத்து இந்தில அமிதாப் படத்துல நடிக்கறேன்னு கிளப்பி விடுவோம்.அடுத்து விஜய்க்கு ஜோடினு பேச்சு அடிபடுதே... அப்படியா! விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். அவர் படங்களை ரெகுலரா பார்த்து ரசிக்கறேன். என் செலிபிரிட்டி க்ரெஷ் அவர்தான். நான் ‘சுல்தான்’ல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி இருந்து அவரோட படத்துல நான் நடிக்கறதா டாக் வந்துட்டே இருக்கு. அந்த நல்வாய்ப்பை நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன்! அப்படி நடந்தா என்னை விட மகிழ்ச்சில வேறு யார் மிதக்கப் போறாங்க!
மை.பாரதிராஜா
|