மேட்சிங் வேட்டி சட்டை!



தீபாவளி என்றாலே கொண்டாட்டம், வண்ணங்கள் நிறைந்த பட்டாடை மற்றும் பட்டாசுகள்தான் நினைவுக்கு வரும். அதேபோல் வண்ணங்கள் என்றால் வாடிக்கையாளர்களின் மனதில் நினைவுக்கு வருவது ‘உதயம் வர்ணா’ வேஷ்டி - சட்டைகள்.சட்டைகளின் நிறத்திற்கு ஏற்ப மேட்சிங்கான வேஷ்டியின் பார்டர் பல வண்ணங்களில் உள்ளன.

முழுக்கை மற்றும் அரைக்கை காட்டன் சட்டைகள் மற்றும் அதற்கு மேட்சிங் பார்டர் வேஷ்டிகள் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வயதிற்கு ஏற்ப கிடைக்கிறது. இப்போது இரண்டு வெள்ளைச் சட்டைகள் கொண்ட பேக் ரூ.659க்கு அனைத்து ஜவுளிக் கடைகளிலும் கிடைக்கிறது. மேலும் இதனை www.uathayam.in என்ற இணையம் மூலமாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

விசிறி மடிப்பு புடவைகள்

எப்போதும் போத்தீஸின் சிறப்பான வசுந்தரா சில்க்ஸ். பிரத்யேகமாக போத்தீஸ் நெய்து தரக்கூடிய லைட் வெயிட் சில்க் புடவைகள். கொஞ்சம் கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் புடவைகள். இந்த வருடம் சிறப்பாக விசிறி மடிப்பு சேலைகள் களத்தில் இறங்கியுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிப் பெண்கள் என இனி பட்டுப்புடவை கட்டிக்கொள்ள யோசிக்க அவசியம் இல்லை.

இந்த புடவைகள் மடிப்பு வைத்தே வரும் என்பதால் அப்படியே சுற்றி மடிப்பை மட்டும் செருகிக் கொள்ளலாம். எங்கே மடிப்பு கலைந்து விடுமோ என்ற பயமும் வேண்டாம். இதன் விலை ரூ.1500 முதல் ரூ.6000 வரை

பைரவி பட்டுப் புடவைகள்

சென்னை சில்க்ஸ் இந்த வருட தீபாவளி சிறப்பாக பைரவி பட்டுப் புடவைகளை களமிறக்கி உள்ளது. அதாவது மிகக் குறைந்த விலையில் கிராண்டான
பட்டுப்புடவைகள். பார்ப்பதற்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரையிலும் கூட விலை இருக்குமோ என நினைக்க வைக்கும். ஆனால் இவைகளின் விலை
ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே.

80 வருட பாரம்பரியம்!

இந்தியாவின் மாறுபட்ட கைத்தறி பாரம்பரியத்தை உலகுக்கு கொண்டு வருவதன் மூலம் கடந்த 80 வருடமாக ‘சுந்தரி சில்க்ஸ்’ தன் பட்டுப் பயணத்தை இன்றும் அதே மெருகுடன் வழிநடத்தி வருகிறது. எங்களின் ஒவ்வொரு பட்டும் மிகவும் நேர்த்தியாகவும், திறமையான நெசவாளர்களால் நெய்யப்படுவதால் பாரம்பரியம் மாறாமல் அதே அழகுடன் வடிவமைக்கப்படுகிறது.