ஆமா... எனக்கு பிகினி செட் ஆகும்!



‘கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி... இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி...’ என டூயட்டாய் இனிக்கிறார் ரியா சுமன்.
டோலிவுட்டில் நானியின் ‘மஜ்னு’வில் என்ட்ரி ஆனவர். மாடலிங்கிலும் டாப்பில் பறந்தவர். அமிதாப்புடன் நகைக்கடை, நம்மூர் துணிக்கடை என ஜொலித்தவர் ஜீவாவின் ‘சீறு’விலும் சிறகடித்தார். இப்போது கோலிவுட்டில் பரபரக்கிறார்.

‘‘‘சீறு’வுக்குப் பிறகு தமிழ்ல ஒரு ரவுண்ட் வந்திருக்கணும். கொரோனா, லாக்டவுன்னு போனதால எல்லாரோட கேரியரும் முடங்கிடுச்சு.
பாண்டமிக் டைம்ல வீட்லதான் இருந்தேன். தினமும் ஒரு படம்னு பார்த்திட்டு அப்டேட் பண்றதுக்கான வாய்ப்பு அமைஞ்சது. தெலுங்குல என் ரெண்டாவது படம், ‘பேப்பர் பாய்’ பண்ணும்போதுதான் இங்க ‘சீறு’வுக்காக கேட்டாங்க. வாசுகியா நல்ல நேம் கிடைச்சது. அந்தப் படம் ரிலீஸானப்ப மும்பைல இருந்தேன்.

அங்க ஒரேயொரு தியேட்டர்லதான் தமிழ்ப்படம் போட்டிருந்தாங்க. ‘சீறு’ வெளியான தியேட்டர் எங்க வீட்லயிருந்து பல கிலோமீட்டர் தொலைவுல இருந்தது. எங்க அம்மாவோட டிராவல் பண்ணி, படத்தை பார்த்துட்டு வந்தேன். தியேட்டர்லேயும் என்னை அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டினாங்க...’’ பூரிக்கிறார் ரியா.

அதென்ன ரியா?
அருமையான ஒரு பூவோட மணம்னு அர்த்தம். பூர்வீகம் மும்பை. அப்பா சிந்தி. பிசினஸ்மேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்துகிட்டே பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். மாடலிங்கும் பண்ணினேன்.காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறப்ப தெலுங்குல ஆஃபர் வந்தது. ‘நான் ஈ’ ஹீரோ நானி சாரோட ‘மஜ்னு’ல நடிக்கக் கேட்டாங்க. ஏற்கெனவே அவரோட படங்களைப் பார்த்திருந்ததால உடனே கமிட் ஆனேன்.

‘மஜ்னு’வுக்குப் பிறகு படிப்புல கவனம் செலுத்தினேன். மும்பைல இருக்கற அனுபம் கெர் ஆக்டிங் ஸ்கூல்ல ஆக்டிங் கோர்ஸும் முடிச்சேன். அந்த இன்ஸ்டி டியூட்டின் புராஜெக்ட் ஒர்க்ல எல்லாம் நான் நடிச்சிருக்கேன். ஃபைனல் இயர் முடிச்சபிறகு ‘பேப்பர் பாய்’ பண்ணினேன். ஓரளவு தெலுங்கு பிடிபட்டுச்சு. இப்ப கொஞ்சம் தெலுங்கும் தெரியும்.

தமிழ்ல என்ன படங்கள் பார்த்திருக்கீங்க?
சென்னையில் இருந்தப்ப நிறைய பார்த்தேன். ‘நானும் ரவுடிதான்’ பார்த்ததும் நயன்தாராவின் பர்ஃபாமென்ஸ் அவ்ளோ பிடிச்சிருந்தது. அந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கிடைச்சா நானும் அசத்தியிருப்பேன். தமிழ்ல நல்ல நல்ல கதைகள், கன்டன்ட் படங்கள் எடுக்கறதால கோலிவுட்ல படங்கள் பண்ணணும்னு கனவு காண ஆரம்பிச்சுட்டேன். ‘பருத்தி வீரன்’, ‘96’, ‘என்ஜிகே’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சைக்கோ’, ‘பேட்ட’னு பட்டியல் பெருசு.

மலையாளத்துல ‘கும்பளாங்கி நைட்ஸ்’ பார்த்தேன். நானும் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஸோ, நேட்டிவிட்டி படங்கள் ரொம்பவே பிடிக்குது. கல்ச்சர் பேசும் படங்களை தேடித் தேடி பார்க்கவும் பிடிக்கும்.உங்களுக்கு பிகினி பொருத்தமா இருக்குமே..?

தேங்க்ஸ். ஆனா, இந்த உடல்வாகு ஃபிட்னஸ்ல வந்ததுனாலும் இவ்ளோ ஸ்லிம்முக்கு காரணம், அம்மா அப்பா கொடுத்த கிஃப்ட்.
நான் அதிகமா ஃபிட்னஸ் பக்கம் போக மாட்டேன். லிமிட்டான யோகா மட்டும்தான். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப கட்டுப்பாடா இருப்பேன். எண்ணெய், காரமான அயிட்டங்களைத் தொடமாட்டேன். ஜங் ஃபுட்ஸும் கிடையாது.

தமிழ்ல என் முதல் படமே ஹோம்லியாதான் பண்ணினேன். பிகினி அணியற ஐடியா இல்ல. ஆனா, கதையும் கேரக்டரும் பிடிச்சிருந்தா அதைப் பத்தி யோசிக்கலாம்!

மை.பாரதிராஜா