வலைப்பேச்சு



@SK Karthick
இந்த வருஷம் என்னிடம் அதிகமுறை கேட்கப்பட்ட கேள்விகள்.
1) அப்புறம் ஏதும் விசேஷம்?
2) கொரோனாக்கு எப்ப தடுப்பூசி வரும்?
இரண்டுக்கும் ஒரே பதில்தான். இப்போதைக்கு பாதுகாப்போட இருப்போம். எல்லாம் வரும்போது வரும்.

@Ram Vasanth மோடி கடவுள் போன்றவர் - ஜே பி நட்டா
பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளே காரணம் - நிர்மலா சீதாராமன்.

@Deepa Janakiraman ஆன்மிக அரசியல் என்பது அரசியலுக்கு வரட்டா வேண்டாமா என்பதில் தொடங்கி பொருளாதார சரிவுக்கு ஆண்டவனையே பார்ட்னர்ஷிப் ஆக்குதில் தன்னைப் பொருத்திக் கொள்கிறது.

@teakkadai1 ஒரு ஊரில் இருக்கிற வீடுகளில் என்னென்ன சமைக்கணும்னு அந்த ஊர் பிச்சைக்காரங்கல்லாம் ஒண்ணாக் கூடி தீர்மா னம் போட்டாங்களாம். அதுமாதிரி மொழிக் கொள்கை, பொருளாதாரம் பத்தி எல்லாம் பேசிட்டு இருக்காங்க.

@Ramanujam Govindan ரஜினி எப்ப அரசியலுக்கு வருவார்னு பல நூற்றாண்டுகளாக விவாதித்துக் கொண்டிருந்தனர். திடீ
ரென கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். அந்த லாஜிக்படி பார்த்தால் ‘மருத நாயகம்’ திரைப்படத்தில் ரஜினி நடித்து வெளிவர வாய்ப்பிருக்கிறது!

@priya_flyingirl ஜிடிபி அப்படீனா என்னனே தெரியாத ஒரு பொற்காலம் இருந்தது. அப்பல்லாம் நாம மன்மோகன் சிங்கை கேலி பேசி, குஜராத் போட்டோஷாப்களை ஷேர் பண்ணிட்டு, ‘இருங்கடா மோடிஜி வரட்டும், உங்களை எல்லாம் ஒரு கை பார்க்கிறோம்’னு சவுண்டு விட்டுட்டு நிம்மதியா இருந்தோம். காலம்தான் எவ்ளோ பெரிய காண்டாமிருகம்...

@thoattaஇந்தி தெரியாத தலைவன் இந்திப் படத்துக்கு மியூசிக் போடுறான்... இந்தி தெரிஞ்சவன், இந்தி தெரியாத ஊருக்கு வந்து பானி பூரி வித்துக்கிட்டு இருக்கான்.

@சசி தரணி க்ளாஸ் டீச்சர்கிட்ட டியூசன் போகாம வேற ஸார்ட்ட டியூசன் போனோம்னு, மார்க்க கொறச்சு போடற டீச்சர்ஸ்தான் ஆறாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரைக்குமே... நெஜமா சொல்லணும்னா நாம் படிச்ச காலத்துல டீச்சர்ஸ் மேல வெறுப்பு மட்டுந்தான் இருந்துருக்கு. அவ்ளோ பார்ஷியாலிட்டி. பலர் சிலாகிக்கற மாதிரியான டீச்சர்ஸே எனக்கெல்லாம் அமையவே இல்லங்கறதுதான் நிதர்சனம். அப்பெல்லாம் நல்லா படிக்கற, கலரா அழகா இருக்கற புள்ளைங்களை மட்டுந்தான் டீச்சர்ஸ் ஸ்டூடண்டாவே மதிச்சாங்க.

@thirumarant கொரோனா கவுண்ட் தாறுமாறா போவுது... ஜிடிபி வரலாறு காணாத அடி வாங்குது... பீகார் தேர்தல் வருது... One solution for all... எல்லையில் ராணுவ வீரர்கள்...

@Paadh asaari Vishwanathan குழந்தை தன் பொம்மைகளை பொம்மை என உணரும் அத்தருணமே, மனிதன் துக்கத்தின் முதல் படியை மிதித்து விடுகிறான்.

@Karunakaran Karthikeyan சரி சரி என்பது தமிழில் சாரி ஆகும்.

கவிதை கார்னர்
@Vannadasan Sivasankaran S
திணிக்கப்பட்ட பயிற்சி தான்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டேன்.
நீங்கள் நிஜம் என்று நம்பும் அளவுக்கு
என்னால் இப்போது
சரியான அகலத்தில் சிரிக்க முடிகிறது

@இந்திரா கிறுக்கல்கள்  ஒரு கோடைகாலத்தை, ஒரு மழை நாளை, ஒரு நள்ளிரவை, ஒரு மரணத்தை, ஒரு பிரிவை, ஒரு அறிமுகத்தை... என பிரத்யேகமான ஏதாவதொன்றை ஞாபகப்படுத்தும் தினங்களுக்கு வேட்டை மிருகமென்று பெயர்.

@Aarthi Dhanraj ஸ்கூல் வேன் ஏழரைக்கே வந்திருதுன்னு ஸ்கூல திட்டிட்டு கெடந்தேன். திட்டின வாயை சானிடைசர் ஊத்தி கொப்பளிக்கணும். வேன் சார்... வேன் சார்... நீங்க விடிகாலை ஆறு மணிக்குக் கூட வாங்க... ரெண்டையும் குண்டுக்கட்டா தூக்கி உள்ள போட்டுடறேன்... தூக்கிட்டு ஸ்கூலுக்கு போவீங்களோ எங்க போவீங்களோ... சாயந்தரம் வரைக்கும் சுத்த விட்டு கூட்டினு வாங்க சார். சூடம் கொளுத்தி சாம்பிராணி
போடறேன்...

@Gargy Manoharan டொனேஷன் நோட்ட தூக்கிட்டு வர்றவங்ககிட்ட, ‘அம்மா இல்லணே’னு சொன்னதுமே ‘‘அம்மா எப்பவுமே கொடுப்பாங்க...’னு சொல்றாங்க. அடேய்...  நான் கூட பத்து, இருபது கொடுப்பேன்டா... எங்க அம்மா கொடுப்பாங்கன்னு சொன்ன பார்த்தியா... அதுக்கே உம் மேல நாய அவுத்துவிடணும்!