நைட் ரெண்டு மணிக்கு குடிச்சேன்! அனு இமானுவேலின் அட்டகாசம்



‘‘விஷால் நடிப்புல மிஷ்கின் இயக்கின ‘துப்பறிவாளன்’ படத்துக்குப் பிறகு தமிழ்ல நிறைய ஆஃபர்ஸ் வந்துச்சு. கதைகள் எதுவும் திருப்தி தரல. கலகலப்பான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமா பண்ணணும்னு காத்திருந்தேன். இடையே தெலுங்கில் நல்ல கதைகள் அமைஞ்சது.
அதனால தமிழ்ல கொஞ்சம் இடைவெளியும் ஆச்சு. எல்லாமே நல்லதுக்குத்தான். ஏன்னா, நான் எதிர்பார்த்த மாதிரியே அருமையான ஒரு கமர்ஷியல் கதையை பாண்டி ராஜ் சார் சொன்னார். அதுவும் அதை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறாங்க..

சிவகார்த்திகேயன் ஹீரோ என்றதும், உடனே கமிட் பண்ணிட்டேன். இந்தப் படத்தை மிஸ் பண்ணிடக்கூடாதுனு நினைச்சு பண்ணினபடம் தான் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. அதுல மைலாஞ்சியா கோலிவுட்ல செமையா ரீச் ஆகிட்டேன். லாக்டவுனுக்கு முன்னாடி தமிழ்ல நிறைய கதைகள் கேட்டேன். இன்னும் எதையும் ஃபைனல் பண்ணல. ஆனாலும் கூடிய சீக்கிரத்துல என்னை மறுபடியும் தமிழ்ல பாக்கலாம்...’’ ஏசி காற்றில் கலைந்தாடும் கூந்தலைக் கோதியபடி ஆனந்தமாகிறார் அனு இமானுவேல்.

அமெரிக்க பேபிக்கு சினிமா ஆர்வம் எப்படி..?
என் பூர்வீகம் கேரளானாலும், நான் பிறந்து வளர்ந்தது அமெரிக்காலதான். அமெரிக்காவிலேயே படிச்சு வளர்ந்து தென்னிந்திய படங்களில் பிசியா நடிக்கற ஹீரோயினா... அது எனக்குத் தெரிஞ்சு  நான் மட்டும்தான் இருக்க முடியும்னு நினைக்கறேன். எங்க வீட்ல அப்பா, அம்மானு எல்லாருமே படங்கள் பார்ப்போம். எப்பவும் தமிழ், மலையாள,  ஆங்கிலப் படங்கள்னு பார்த்துட்டே இருப்போம். எனக்கு அப்ப தமிழ்பேசத் தெரியலைனாலும் புரியும்.

நான் ஆறாவது படிக்கும் போது ஏதோ ஒரு தமிழ்ப் படம் பார்த்தேன். அந்த டைம்ல எனக்கு மாடலிங்குக்கும் ஆக்டிங்குக்கும் வித்தியாசம் கூட தெரியாது. எங்க அப்பாகிட்ட ‘நான் மாடலிங் பண்ண விரும்புறேன்’னு சொன்னேன். அவர் ‘எந்த மாடல் போல’னு கேட்டார். உடனே, நான் பார்த்த ஒரு தமிழ்ப் படத்தின் ஹீரோயின் பெயரைச் சொல்லி, அவங்கள மாதிரி மாடலிங் ஆகணும்னேன். அப்பாவுக்கு சிரிப்பு வந்துடுச்சு. ‘நீ சொல்ற ஆளு மாடலிங் பண்றவங்க கிடையாது. அவங்க சினிமா ஆக்ட்ரஸ். மாடலிங் வேற, சினிமா வேற. ரெண்டும் வேற வேற துறைகள்’னு புரிய வச்சார்.
என்னோட லக், மாடலிங் பண்ணாமலேயே இண்டஸ்ட்ரிக்குள்ள வந்துட்டேன்.

ஆமா, மலையாளத்துல ‘ஸ்வப்ன சஞ்சரி’யில் அறிமுகமானேன். அதுல ஜெயராம் அங்கிளின் மகளா நடிச்சேன். அப்புறம் படிப்பைத் தொடரப் போயிட்டேன். சைக்காலஜி படிச்சுட்டு இருக்கும்போது, நிவின் பாலியோட ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’ வாய்ப்பு வந்துச்சு.
படிப்பா... நடிப்பானு குழப்பம். மறுபடியும் அப்பா தெளிவு படுத்தினார். அவர் என்கிட்ட, ‘எப்ப வேணாலும் படிச்சுக்கலாம். நடிப்பு வரும்போது பயன்படுத்திக்கோ’ன்னார். அப்புறம்தான் டோலிவுட்ல என்ட்ரி.நானியின் ‘மஜ்னு’வில் அறிமுகமானேன்.

தொடர்ந்து டோலிவுட்ல ட்ராவல் பண்ணினதுல தெலுங்கு ஓரளவு பேச கத்துக்கிட்டேன். பவன் கல்யாண் சாரோட ‘அக்ஞானவாசி’யில் டப்பிங்கை நானே பேசினேன். மறக்க முடியாத மொமன்ட். அப்புறம், ‘கீத கோவிந்தம்’ல கெஸ்ட் ரோல் பண்ணினப்ப, அதிலும் டப்பிங் பேசினேன். இப்ப தமிழ்லயும் டப்பிங் பேச ரெடியாகறேன்.

உங்க ட்ரீம் ரோல் எது..?
இனிமேதான் யோசிக்கணும். எந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்க விரும்பறேன்னு சொல்றதுக்கு நான் ஏகப்பட்ட கேரக்டர்கள் பண்ணிடல. அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் கெயின் பண்ணல. நிறைய ரோல்கள் பண்ண விரும்புறேன். எக்ஸ்பரிமென்ட் முயற்சிகளும் எடுக்கறேன்.

ஆனா, ஒரு விஷயத்துல க்ளியரா இருக்கேன். எந்த ரோல் பண்ணினாலும் ஆடியன்ஸ் ஞாபகம் வச்சுக்கணும். பேசப்படணும். அப்படி படங்கள்தான் செலக்ட் பண்றேன்.

எல்லா இண்டஸ்ட்ரியையும் கவனிக்கறேன். மலையாளத்துல நேச்சுரல் ஃபிலிம்ஸ் அதிகம் வருது. அதான் பெஸ்ட் ஃபிலிம் மேக்கிங்னு நான் உணர்றேன். ஆனா, அங்க ஹீரோயினுக்கான ஸ்கிரீன் ஸ்பேஸ் ரொம்பவும் குறைவா இருக்கு. அந்த நிலை இனி வரும் காலங்கள்ல மாறும்னு நினைக்கறேன்.லாக்டவுன் எப்படிப் போச்சு...?

சிறப்பா! எனக்குப் பிடிச்ச மாதிரி அமைச்சுக்கிட்டேன். நான் அமெரிக்காவில் வளர்ந்ததாலோ என்னவோ, ஆங்கில நாவல்கள், கட்டுரைகள் படிக்கற பழக்கம் வந்திடுச்சு. ஒவ்வொரு வீக் எண்டும் படிக்க வேண்டிய நூல்கள்னு ஒரு செட் ஆஃப் புக்ஸ் எடுத்து வச்சிடுவேன். இந்தியா வந்ததும் அந்தப் பழக்கம் இன்னும் ஸ்டிராங் ஆகிடுச்சு. ஷூட்டிங்ல எவ்வளவு பிசியா இருந்தாலும் சரி, பிரேக்ல புத்தகங்கள்தான் என் சாய்ஸ்.

இந்த லாக்டவுன்ல நிறைய டைம் கிடைச்சது. எவ்வளவு நேரம்தான் வெப் சீரீஸை பார்த்துட்டு இருக்க முடியும்? ஸோ, மறுபடியும் புக்ஸை எடுத்துட்டேன்.

அமெரிக்கன் ரைட்டர்ஸ் பலருடைய புத்தகங்கள் என்னோட கலெக்‌ஷன்ல இருக்கு. அதுல ‘எஜுகேடட்’, ‘சிர்ஸ்’, ‘எ லிட்டில் திங்க்ஸ்’, ‘ரேடியோ சயின்ஸ்’, ஜப்பான் ரைட்டர் ஹருக்கி முராகமி நாவல்கள்னு ஒரு ரவுண்ட் படிச்சு முடிச்சேன். இதெல்லாம் என்னோட ஃபேவரிட் புக்ஸ்.

ஒவ்வொரு புத்தகமும் வேறொரு உலகத்துக்கு கையைப் புடிச்சு கூட்டிட்டுப் போகும். ரீடிங்ல ஒரு நல்ல விஷயம்... ஒரு புக்கை படிச்சா போதும்... எழுதினவரோட அனுபவத்தைத் தெரிஞ்சுக்க முடியும். ஒரு ஆக்ட்ரஸுக்கு இதெல்லாம் ப்ளஸ்ஸா கூட அமையும். ஐ என்ஜாய் ரீடிங் புக்ஸ்.

சமீபத்துல மாலை நேரத்துல ஒரு புக்கை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சேன். டைம் போனதே தெரியல. அப்படியே நைட் ரெண்டு மணியாகிடுச்சு.
திடீர்னு டீ குடிக்கவும் தோணிடுச்சு. நட்ட நடு ராத்திரியில் நானே கிச்சனுக்கு போய் என் கையால டீ போட்டு குடிச்சேன்!அந்த மடக் மடக் மொமன்ட்டை இன்ஸ்டாவிலும் ஷேர் பண்ணினேன்!

மை.பாரதிராஜா