கொரோனா பயத்தைப் போக்கும் சவப்பெட்டி!



டோக்கியோவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது. ஜப்பானில் கொரோனோவின் தாக்கம் குறைவு என்றாலும் அது உண்டாக்கிய பயத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
கொரோனோவின் பயத்தைப் போக்கவே இந்த சவப்பெட்டி. ஆம்; கொரோனா பயத்தினால் மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் 6.5 அடி நீளமுள்ள இந்தப் பெட்டிக்குள் படுத்துக்கொள்ள வேண்டும். சுற்றிலும் திகில் கிளப்புகிற மின்விளக்குகள் எரியும். திடீரென்று விநோதமான சத்தம் கேட்கும். தூரத்தில் இருந்து பேய்க்கதை கேட்கும்.

கண் விழித்துப் பார்த்தால் ஜாம்பிகள் ஹாயாக நடந்துகொண்டிருக்கும். மொத்தத்தில் கிறங்கடிக்கும் ஒரு திகில் அனுபவம்.  இது கொரோனாவின் பயத்திலிருந்து விடுவிப்பதாகவும், ரிலாக்ஸாக இருப்பதாகவும் சொல்கிறார்கள் ஜப்பானிய இளசுகள். பெட்டிக்குள் இருக்கும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

த.சக்திவேல்