கண்ணாடி டாய்லெட்!



ஜப்பானையே கலக்கிக் கொண்டிருக்கும் புது தொழில்நுட்பம் கண்ணாடி டாய்லெட்!

பரிசோதனைக்காக டோக்கியோ நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இரண்டு இடங்களில் இந்த டாய்லெட்டை அமைத்துள்ளனர். டாய்லெட்டின் சுவர்கள் கண்ணாடியால் உருவாக்கப்பட்டவை. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே இருப்பது அப்படியே தெரியும்.
அப்புறம் எப்படி மக்கள் இதைப் பயன்படுத்துவார்கள் என்கிறீர்களா? டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவை மூடியவுடன் வெளியிலிருந்து வெளிச்சம் உள்ளே புகாது. இருளாக இருக்கும். அதனால் உள்ளே யாராலும் பார்க்க முடியாது!

ஒருவேளை கதவை சரியாக மூடாமல் விட்டால் ஒளிபுகுந்து உள்ளே இருப்பவரின் நிலை அல்லோலகல்லோலமாகிவிடும்.

அதனால் கதவை மூடும்போது கவனமாக இருப்பது அவசியம். அத்துடன் பொதுக் கழிப்பறையின் மீதான மக்களின் பார்வையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கண்ணாடி டாய்லெட்டை அமைத்திருக்கின்றனர். இதற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து டோக்கியோ நகரின் பூங்காக்களையும் மக்கள் கூடும் இடங்களையும் கண்ணாடி டாய்லெட் அலங்கரிக்கும்.

த.சக்திவேல்