கோடிப் பேருக்குப் பிடிக்காத டிரெய்லர்!



இந்திப் பட டிரெய்லர் ஒன்று யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், இது நெகட்டிவ் சாதனை.

ஆம்; யூ டியூப்பில் வெளியான வீடியோக்களிலேயே அதிகளவு டிஸ்லைக்குகள் பெற்ற இரண்டாவது வீடியோ என்ற சாதனையை தன்வசமாக்கியிருக்கிறது ‘சடக் 2’ டிரெய்லர். இதுவரை இதன் டிரெய்லரை 6.2 கோடிப் பேர் பார்த்துள்ளனர். அதில் 1.1 கோடிப்பேர் டிரெய்லர் பிடிக்கவில்லை என்று டிஸ்லைக் செய்துள்ளனர்.

‘யூ டியூப் ரீவைண்ட் 2018’ என்ற வீடியோ 1.8 கோடி டிஸ்லைக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.   சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் உண்டாக்கிய பாதிப்பு பாலிவுட்டை ஆட்டம் காண வைத்திருக்கிறது. நட்சத்திர வாரிசுகளின் படங்களை முற்றிலும் புறக்கணக்கத் துவங்கியுள்ளனர் இந்திய ரசிகர்கள்.

அதன் விளைவுதான் கோடிக்கணக்கான டிஸ்லைக்குகள். யெஸ். ‘சடக் 2’-ன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மகேஷ் பட். படத்தில் நடித்திருக்கும் பூஜா பட்டும், அலியா பட்டும் மகேஷ் பட்டின் மகள்கள்!l

த.சக்திவேல்