மஞ்சள் தவளை!



‘வாவ்’, ‘அமேஸிங்’, ‘நம்பமுடியவில்லை’, ‘நிஜ ரோமியோ’ - இப்படி ஆயிரக்கணக்கான கமெண்டுகள் அந்த வீடியோவுக்கு குவிகின்றன. அத்துடன் இரண்டே நாட்களில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்து ரசித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரி பிரவீன் என்பவரால் டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது என்று திறந்து பார்த்தால் நூற்றுக்கணக்கான தவளைகள் ஹாயாக மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் மஞ்சள் வண்ண ஆண் தவளைகள்!அமேசான் காட்டில் வாழும் தவளைகளாக இருக்கும் என்று அவற்றைப் பற்றி தேடிப் படித்தால் ஆச்சர்யமே மிஞ்சுகிறது.

ஆம்; இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் நர்சிங்பூரில் வாழும் தவளைகள் இவை!இவற்றின் உண்மையான நிறம் மஞ்சள் இல்லை. மழைக்காலங்களிலும் பெண் துணையை ஈர்ப்பதற்காகவும் தங்களின் நிறத்தை மஞ்சளாக மாற்றிக் கொள்கின்றன இந்த ரோமியோக்கள்!  

த.சக்திவேல்