வைர மாஸ்க்! விலை ரூ.4 லட்சம்!சில நாட்களுக்கு முன் புனேவைச் சேர்ந்த நகைப்பிரியர் ஒருவர் தங்க மாஸ்க் அணிந்து வைரலானார். அதன் விலை சுமார் 3 லட்ச ரூபாய். இதற்கிடையில் சூரத்தைச் சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளரை அந்த தங்க மாஸ்க் கவர, உடனே அவர் விலைஉயர்ந்த மாஸ்க்குகளை டிசைன் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

தங்கம், வெள்ளி, வைரம், அமெரிக்கன் வைரத்தில் அலங்கரிக்கப்பட்ட மாஸ்க்குகள் அவரது நகைக்கடையை டிரெண்டாக்கிவிட்டன. தங்கமும் அமெரிக்கன் வைரமும் சேர்ந்த மாஸ்க்கின் விலை ரூ.1.5 லட்சம். தங்கம் வைரமும் சேர்ந்த மாஸ்க் 4 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த மாஸ்க்கை துவைத்து திரும்பவும் பயன்படுத்த முடியும். மாஸ்க் பயன்படுத்த வேண்டாம் என்ற நிலை வரும்போது மாஸ்க்கிலுள்ள தங்கம், வைரத்தை மனதுக்குப் பிடித்த நகையாக மாற்றிக்கொள்ளலாம்!

த.சக்திவேல்