லாக் டவுன் பாதி... இன்ஸ்டா க்ளாமர் மீதி!



முக்கால் பங்கு ரம்பா... மீதிப் பங்கு தெம்பா... என பியூட்டி மிக்ஸிங்கில் கலர்ஃபுல்லாக கிறுகிறுக்கிறார் ஐஸ்வர்யா மேனன். ‘தமிழ்ப்படம் 2’, ‘நான் சிரித்தால்’ என தமிழில் அரை டஜன் படங்களில் ஜொலித்த அமுல் பேபி. இப்போது இன்ஸ்டாவில் புதுப்புது போட்டோஷூட்களைத் தட்டிவிட்டு, இளசுகளின் ஹார்ட்டீன்களுக்கு லைக்ஸை அள்ளித் தெளிக்கிறார்.

நீங்க என்ஜினியராமே..?
100 பர்சன்ட்! எங்க வீட்ல எல்லாருமே செம படிப்பாளிங்க. அப்பா எம்பிஏ. அம்மா, பி.காம். அண்ணன் டாக்டர். சின்ன வயசில இருந்தே எனக்கு சினிமால இன்ட்ரஸ்ட். மலையாளினாலும் ஈரோட்டுலதான் ஸ்கூல் படிப்பை முடிச்சேன். சென்னைல காலேஜ். அப்பவே விளம்பரப் படங்கள்ல கலக்கினேன்.

அந்த டைம்லதான் ஆக்ட்டிங் மேல முழு கான்ஃபிடன்ட் வந்துச்சு. ‘நான் சினிமாவில் நடிக்கப்போறேன்’னு வீட்டுல சொன்னதும், ஷாக் ஆனாங்க. ஏன்னா, இண்டஸ்ட்ரில தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்கனு எங்களுக்கு யாருமில்ல. ஒருவழியா அவங்களை சம்மதிக்க வைச்சு தமிழ்ல ‘ஆப்பிள் பெண்ணே’ல அறிமுகமானேன். தமிழ்ல சரளமா பேசறதால எனக்கு அந்த வாய்ப்பு அமைஞ்சது.

அந்தப் படத்துல ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் சாருடன் நடிச்சேன். அப்ப அவர், ‘நீங்க என்ஜினியராமே’னு கேட்டு ஆச்சரியப்பட்டு, ‘இப்ப இண்டஸ்ட்ரிக்கு படிச்சவங்க நிறைய பேர் வர்றாங்க. ஹெல்த்தியா இருக்கு’னு பாராட்டினார்.அம்மா முழுமையா என்னை சப்போர்ட் பண்றதாலதான் இவ்வளவு எனர்ஜியா, ஆக்டிவ்வா இருக்கேன். அடுத்து கன்னடத்துல ஒரு படம் பண்ணினேன். தமிழ்ல வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் ரீமேக் அது. அதை தயாரிச்சவங்க தமிழில் ‘வீரா’ பண்ணினாங்க. சாண்டல்வுட்ல இருந்து சர்ர்ர்னு தமிழுக்கு வந்துட்டேன்.

ஷூட்ல யாரும் எனக்கு பிராம்ப்டிங் பண்ண மாட்டாங்க. ஏன்னா, முதல் நாளே டயலாக்ஸைக் கேட்டு வாங்கிட்டு மனப்பாடம் பண்ணிடுவேன். சிச்சுவேஷனுக்கு ஏத்த மாடுலேஷன்ல அதை ஸ்பாட்ல அச்சு பிசகாம சொல்லுவேன்.ஸாங்ஸ் ஷூட்டும் அப்படிதான். பாடல் வரிகளைக் கேட்டு வாங்கி, ஹோம் ஒர்க் செஞ்சு படப்பிடிப்புல நானே பாடறா மாதிரி சீன் போடுவேன்!

இந்த வருஷம் ‘நான் சிரித்தால்’ ரிலீஸோட ஹேப்பியா ஸ்டார்ட் ஆச்சு. அப்புறம் லாக்டவுன் வந்துடுச்சு. ஸோ, வீட்ல லாக் ஆனேன். ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றேன்! உங்க லவ் ப்ரபோசல்ஸ் பத்தி சொல்லுங்க..?

ம்க்கும். நேர்மையா சொல்லணும்னா காலேஜ் டேஸ்லதான் ப்ரபோசல் வந்தது. அப்புறம் ஒருத்தனும் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணலை. பயப்படறாங்க போலிருக்கு! உங்க ட்ரீம் பாய் எப்படியிருக்கணும்..?

நல்ல லுக்குல... ஹைட்டா... வெயிட்டா... ஹேண்ட்ஸம்மா இருக்கணும். இப்படியெல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது! ஏன்னா, எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்ல.புரிந்துகொள்பவரா, உள்ளூர பந்தத்தை ஏற்படுத்துபவரா இருந்தா போதும். மத்தபடி அப்பியரன்ஸ்..? அவசியமில்ல. ஏன்னா, தோற்றத்தைப் பார்த்து மயங்குவது நீடிக்காது!

இன்ஸ்டாவில் க்ளாமர் போட்டோஸா போட்டு சூடேத்தறீங்க..?
தேங்க்ஸ். சமீபத்துல வைரல் ஆன சேலை ஷூட் கூட வழக்கமான போட்டோஷூட்டா நினைச்சுதான் பண்ணினேன். நேச்சர் அண்ட் கேண்டிட் லுக்ல எடுத்தோம். ஷூட்டை வீடியோவா சும்மா இன்ஸ்டால தட்டிவிட்டேன். பத்திக்கிச்சு!

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை. பட், ஹேப்பிதான். இன்ஸ்டால 15 லட்சம் ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அத்தனை பேரின் அன்புக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ். என்னைப் பொறுத்தவரை க்ளாமர்னா ஸ்கின் ஷோ இல்ல. அட்ராக்‌ஷன். நம்ம ஊர்லதான் க்ளாமர்னா தப்பா அர்த்தப்படுத்திக்கறாங்க.
ஒரு ஜீன்ஸ்ல, டீ ஷர்ட்ல, சல்வார்ல கூட க்ளாமர் லுக் கொண்டுவரமுடியும். அவங்கவங்களுக்கு எந்த உடை சவுகரியமா இருக்குதோ, ஃப்ரீயா ஃபீல் பண்ண முடியுதோ... அதை அணிஞ்சா போதும். க்ளாமர் லுக் கிடைச்சுடும்!

மை.பாரதிராஜா