பலான வருமானம்!



நான்கு மாதங்களாக மொத்த திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் ஒரேயொரு இயக்குநர் மட்டும் இந்திய அளவில் பிசியாக இருக்கிறார்.அவர் தெலுங்கு இயக்குநரான ராம்கோபால் வர்மா. சுருக்கமாக ஆர்ஜிவி.யெஸ். 9 படங்களை இப்போது தயாரிக்கிறார் ஆர்ஜிவி.ம்ஹும். இந்த 9 படங்களையும் அவர் இயக்கவில்லை.

தயாரிக்க மட்டுமே செய்கிறார். இயக்குவது எல்லாம் அவரது உதவியாளர்கள்தான்.‘மர்டர்’, ‘பவர் ஸ்டார்’, ‘த்ரில்லர், ‘கொரோனா வைரஸ்’, ‘லாக்டவுன்’, ‘ஹாரர், ‘ஸ்மார்ட்போன்’... என்றெல்லாம் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாது. மாறாக ஆர்ஜிவியின் இணையதளத்தில் வெளியாகும். ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியே பணம் கட்டி ஒவ்வொரு முறையும் பார்க்க வேண்டும்.

சின்னச் சின்ன நடிகர்களை வைத்து உருவாகும் இந்தப் படங்கள் அனைத்தும் 60% ‘அந்த’ மாதிரி காட்சிகளைக் கொண்டிருக்குமாம். அதாவது ‘கதை’யுடன் கூடிய டபுள் எக்ஸ் படங்கள் இவை!படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன!       

காம்ஸ் பாப்பா