20 நாளில் 4 லட்சம் சந்தாதாரர்கள்!



ஊரடங்கால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்து வருகின்றனர். அடுத்து என்ன செய்வது என்று கவலையில் இருப்பவர்களுக்கு ரோல் மாடலாகிவிட்டார் கார்லோஸ் எலிஜோண்டோ.
மெக்சிகோவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வந்தார் கார்லோஸ். ஊரடங்கின் காரணமாக முதியோரை வீட்டிலேயே இருக்கச் சொல்லியது மெக்சிகோ அரசு. அதனால் கார்லோஸால் வேலைக்குப் போக முடியவில்லை. மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்வார்களா என்ற கவலை வேறு.

இந்நிலையில் 79 வயதான கார்லோஸ் தன்னை பிஸியாக வைத்துக்கொள்ள நினைத்தார். உடனே மகளின் உதவியால் ஒரு யூ டியூப் சேனலைத் திறந்தார்.
கார்லோஸின் சமையல் வித்தைகளை அவரது மகளே வீடியோவாக்கி யூ டியூப் சேனலில் பகிர்ந்தார்.

கார்லோஸ் ஸ்பானிஷில் பேசுவதைப் புரிந்துகொள்ள ஆங்கிலத்தில் சப்டைட்டில் கூட இருக்கிறது. மே 25ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட கார்லோஸின் சேனல் நான்கு லட்சம் சந்தாதாரர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது!

த.சக்திவேல்