சைக்கிள் ஜிவ்வ்வ்வ்!கொரோனா வைரஸின் தாக்குதலால் சானிடைசர், மாஸ்க்கின் விற்பனை மட்டுமல்ல, சைக்கிளின் விற்பனையும் இங்கிலாந்தில் எகிறியுள்ளது.
இங்கிலாந்துவாசிகள் கொரோனா தொற்றிவிடுமோ என்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். அதனால் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சைக்கிளைத் தூசு தட்டி எடுத்துள்ளனர்.

 தவிர, அங்கே சைக்கிள் விற்பனை 200 மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் முன்பெல்லாம் வாரத்துக்கு 20 - 30 சைக்கிள்கள் விற்பனையாகும். இப்போது தினமும் ஐம்பதுக்கும் மேல் விற்பனையாகின்றன. இதுபோக பலர் தங்களின் பழைய சைக்கிள்களை பழுது பார்க்க மெக்கானிக் கடைகளை மொய்க்கின்றனர். ஆனால், சைக்கிள் பழுதுபார்க்கப்பட்டு கைக்குக் கிடைக்க ஒரு வாரம் ஆகிறது. முன்பு சில மணி நேரங்களிலே பழுதுபார்க்கப்பட்டுவிடும்.

இங்கிலாந்து மட்டுமல்ல; ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வாழும் பலர் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்பியுள்ளனர். இதனை கொரோனா வைரஸ் லைஃப் ஸ்டைலில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றமாக ஐரோப்பியர்கள் கருதுகின்றனர்.l

த.சக்திவேல்