லாக் டவுனில் விவசாயம்... அசத்தும் ஹீரோயின்!குவாரன்டைனில் பில்லோ சேலஞ்ச், பேப்பர் சேலஞ்ச், டான்ஸிங், குத்தாட்டம் ஆடிக் கொண்டே வீட்டை க்ளீனிங் செய்வது, டிக்டாக்கில் பட்டையைக் கிளப்புவது... என்றெல்லாம் டைம் பாஸ் செய்து வரும் ஹீரோயின்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்! ‘தும்பா’ படத்தின் மூலம் ஹிரோயினாக அறிமுகமான இவர், நடிகர் கம் புரொட்யூசர் அருண்பாண்டியனின் மகள்!உங்க உறவுக்காரர் ரம்யா பாண்டியன் மாதிரி நீங்களும் டிரெண்டிங்காகதான் ஃபார்மிங் போஸ் குடுத்தீங்களா?

அப்படியெல்லாம் இல்ல. நான் விவசாயம் பண்ணின ஹேப்பியை என் டுவிட்டர் பக்கத்துல ஷேர் பண்ணினேன். மத்தபடி டிரெண்டிங் ஐடியாவோட எல்லாம் போஸ்ட் பண்ணல.
ஆக்‌சுவலா, இந்த லாக் டவுனுக்கு முன்னாடியே நாங்க திருநெல்வேலில உள்ள அப்பாவோட ஊருக்கு வந்துட்டோம். ஊரடங்கு காலத்துல உருப்படியா ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. தவிர, எனக்கும் விவசாயத்துல ஆர்வம் இருந்தது. அங்க அதிகாலைல வயல்ல வாக்கிங் பண்றப்ப அந்த இன்ட்ரஸ்ட் அதிகமாச்சு.

இப்ப நாத்து நட்டிருக்கேன். இதோட அறுவடை வரை எல்லா பிராசஸ்லயும் இனி இறங்கிவிடுவேன். இன்னொரு விஷயம், நானும் விவசாயம் பண்றேன்னு எல்லாம் சொல்லிக்க மாட்டேன். இருபது, முப்பது வருஷங்களா விவசாயம் பண்றவங்களே சைலன்டா இருக்கறப்ப 30 நாட்கள் மட்டுமே விவசாயம் செஞ்ச நான் என்னை ஃபார்மர்னு சொல்லிக்கறது சரியில்ல!

விவசாயத்துல இன்னும் நான் கத்துக்குட்டிதான். ஒரு சக்சஸ்ஃபுல் விவசாயி ஆனபிறகு நிறைய பேசலாம். அப்ப நிறைய விஷயங்கள் எனக்கும் தெரிஞ்சிருக்கும்.அப்பாவை பார்த்துதான் நடிப்பு ஆசை வந்ததா?

அப்படி சொல்ல முடியாது. நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். காலேஜ் படிக்கும் போதே தியேட்டர் ப்ளேல ஆர்வம் காட்டினேன். எல்லா டீம் நாடகங்கள்லயும் நடிச்சிருக்கேன். காலேஜ் முடிச்சதும் அப்பாவோட சேர்ந்து நானும் புரொடக்‌ஷன், டிஸ்ட்ரிபியூஷன் வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சிட்டேன். இடையே பாலே டான்ஸ் கத்துக்கிட்டிருந்தேன்.

அந்த டைம்லதான் ‘தும்பா’ பட வாய்ப்பு வந்தது. சொன்னா நம்பமாட்டீங்க. நான் ஷூட்டிங் போறதுக்கு முதல்நாள்தான் அப்பாகிட்ட அப்படி ஒரு படம் கமிட் ஆன விஷயத்தையே சொன்னேன். அவருக்கு ஸ்வீட் ஷாக்கிங்.

அடுத்தும் படம் பண்றேன். மலையாளத்துல சூப்பர் ஹிட் ஆன ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்ல நடிக்கறேன். ‘ஜூம்பா’ கோகுல் இயக்கறார். இதுல அப்பாவும் (அருண் பாண்டியன்) நடிக்கறார். அப்பா - பொண்ணாகவே படத்துல வர்றோம். தொண்ணூறு சதவிகித ஷூட் முடிஞ்சிடுச்சு.

முதல்முறையா அப்பாவோட நடிச்சது நைஸ் எக்ஸ்பீரியன்ஸ். வீட்ல இருக்கறா மாதிரியே ஸ்பாட்லயும் இருந்தோம். லாக் டவுன் முடிஞ்சதும் இந்தப் படம் வெளியாகும்!  

மை.பாரதிராஜா