Eco Friendly!



பிரபாஸின் ‘சாஹோ’ ஹீரோயின் ஷ்ரத்தா கபூர், இந்த குவாரன்டைனில் மொட்டை மாடியில் தன் ஃபிட்னஸ் ஒர்க் அவுட்டில் இறங்கிவிட்டார்.
சுற்றுச் சூழலில் விழிப்புணர்வு மிக்க ஷ்ரத்தா, இப்போது மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களையே தன் டூத் பிரெஷ் முதற்கொண்டு பயன்படுத்தி வருகிறார். Eco ஃப்ரெண்ட்லி பொண்ணு!

உடை...  அது இலை!

பாலிவுட்டில் துள்ளும் க்யூட்டி, கியரா அத்வானி. நம்மூர் இயக்குநர்கள் லாரன்ஸ், விஷ்ணுவர்த்தன் உள்ளிட்டோர் இந்தியில் இயக்கி வரும் படங்களில் பரபரக்கும் பேபி இவரே.கொரோனாவிற்கு முன்னால் கூட, பெரிய சைஸ் இலை ஒன்றில் தன் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு கிளுகிளு காலண்டர் ஷூட்டில் புன்னகைத்தார். இந்த லாக்டவுனில் அவர் நடித்த வெப் சீரீஸான ‘கில்ட்டி’யை பார்த்து ரசித்த பலரும் ஏகத்துக்கும் பாராட்டியதில், சந்தோஷத்தில் கிடுகிடுக்கிறார் கியரா.