சுக்கு மல்லி



‘‘டேய் சுக்கு..! இன்னுமா கிளம்பலை?’’ வாக்கிங் நண்பன் சுந்தர பாஷ்யம் குரல் கொடுக்க, சுகவனம் தனது அறையின் கதவில் மாட்டியிருந்த சொக்காயை எடுத்து அணிந்து கொண்டபடி வாக்கிங் கிளம்பினார்.நான்கு மருமகள்களும் அவரவர் காரியங்களில் மும்முரமாக இருந்தார்கள்.
இரவுப் பணி செய்து விட்டு வந்த ஆயாசத்தில் இரண்டாவது மகன் குணசேகர் இன்னும் உறங்கிக்கொண்டிருக்க, மூத்தவன் சந்திரசேகர் ஜிம்முக்கு போயிருந்தான். கடைசி மகன் தனசேகர் கிரிக்கெட் ஆட சென்றிருந்தான். மூன்றாவது மகன் ரவிசேகர் ஹாலில் அமர்ந்து ஆங்கில தினசரியை புரட்டிக்கொண்டிருந்தான்.

‘‘அம்மா... சியாமளா! நான் வாக்கிங் கிளம்பறேன்..!’’ பொதுவாக மூத்த மருமகளிடம் கூறி விட்டு சுகவனம் தனது அறையை விட்டு வெளியேற... அதற்குள் ஹாலுக்குள் நுழைந்த சுந்தர பாஷ்யம், ராஜநடை போட்டுகொண்டு சோபாவை நோக்கி நகர, சட்டென்று அவரது கால் எதையோ மிதித்துவிட, அடுத்தகணம் அருவெறுப்புடன் குனிந்து பார்த்து, ஒரு காலால் நொண்டியடிக்க துவங்கினார்.

‘‘என்னடா சுக்கு..! நடு ஹாலுல குழந்தை பாத்ரூம் போயிருக்கு போல இருக்கே..!’’ காலை தூக்கி நின்றாடும் தெய்வமே என்று டிவியில் சரியாக காலை இறைப்பாட்டு நிகழ்வில் யாரோ பாடிக்கொண்டிருக்க, சுந்தர பாஷ்யம் அதற்கேற்ப ஒரு காலை உயர்த்தி நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.சுகவனத்தின் பேரக் குழந்தைகளில் ஏதோ ஒன்று நடு ஹாலில் மலம் கழித்திருக்க, அதனை சுத்தம் கூட செய்யாமல் மருமகள்களும் அப்படி என்ன தலை போகும் வேலை இருக்கிறது.

‘‘மருமகள்களா... என்ன இது அசிங்கம்! பேரக்குழந்தையில ஏதோ ஒண்ணு நடு ஹாலுல பாத்ரூம் போயிருக்கு. அதை கூட கவனிக்காம உள்ளே என்ன பண்ணறீங்க..?’’சியாமளா நக்கலுடன் குரல் கொடுத்தாள். ‘‘என்னோட ரெண்டு பிள்ளைகளும் ஸ்கூல் போற பசங்க. பாத்ரூம்லதான் போவாங்க மாமா!’’
பொறுப்பாளா இரண்டாவது மருமகள், காஞ்சனா? ‘‘‘என் குழந்தை பிரவீன் ரெண்டு நாளா பாத்ரூமே போகலை. இன்னைக்கு சாயங்காலம்தான் டாக்டர் விஸ்வநாதன்கிட்டே அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன்...’’ ஹாலில் மிதிபட்டு அசிங்கத்திற்கு தனது மகன் பொறுப்பல்ல என்பதை
நாசுக்காக அறிவித்தாள்.

மூன்றாவது மருமகள் சுகந்தி எரிச்சலுடன் நான்காவது மருமகளை பார்த்தாள். ‘‘ஏன் மீனா... உன் பிள்ளை செந்தில்தானே அந்த பக்கமா தவழ்ந்துகிட்டு இருந்தான். அவன்தான் போயிருக்கணும். இன்னும் என் பிள்ளை எழுந்துக்க கூட இல்லை...’’ சுகந்தி கூற, கிடைத்தது சாக்கு என்று மீனாவும் எகிற ஆரம்பித்தாள். ‘‘யார் சொன்னா உங்க பிள்ளை செந்தில் எழுந்துக்கலைனு..? கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேன். பேப்பர் படிக்கிற உங்க புருஷன் மடியில உட்கார்ந்து விளையாடிக்கிட்டு இருந்தான். அவன்தான் போயிருக்கணும்...’’

கடைசி இரு மருமகள்களிடையே வாக்குவாதம் அதிகரிக்க, சுகவனம் அவமானத்துடன் சுந்தர பாஷ்யத்தை நோக்கினார். யார் குழந்தை அசிங்கத்தை செய்தது என்று விசாரணை கமிஷனா வைக்க முடியும்?‘‘நீ போயி பாத்ரூம்ல காலை அலம்பிகிட்டு வா. அதுக்குள்ள நான் இதை சுத்தம் செஞ்சுடறேன்...’’ தானே ஒரு பேப்பரை தேடி கிடைத்த தினசரியின் முதல் பக்கத்தையே கிழித்து அந்த அசிங்கத்தை சுத்தம் செய்தார் சுகவனம்.

வாக்கிங் போகும்போது புலம்பி தீர்த்துவிட்டார், சுகவனம். ‘‘உனக்கு கவலை இல்லடா பாஷ்யம். உன் பேர பசங்க எல்லாம் அமெரிக்காவுல இருக்கு. வீட்டு ஹாலுல எதையாவது மிதிச்சுடுவோம்னு நீ பயந்து நடக்க வேண்டாம். எனக்கு இது டெய்லி நடக்கிற அனுபவம்தான். மலத்தின் நாத்தத்தை கூட தங்கிடலாம்டா. ஆனால், உன் பையன் போனானா, என் பையன் போனானானு இந்த மருமகள்கள் போடற சண்டை இன்னும் பயங்கரமா நாத்தம் நாறுது. என்னை கூட அவங்க கவனிக்க வேண்டாம். அவங்க குழந்தைகளை ஒழுங்கா கவனிக்கலாம் இல்லே? மலத்தை நான் சுத்தம் பண்ணிட்டேன். குழந்தைகளை யார் சுத்தம் செய்வாங்க?’’

சுகவனத்தின் வீட்டில் இந்த கூத்து அன்றாடம் நடந்தது. ஏதாவது குழந்தை நடு ஹாலில் அசிங்கம் செய்துவிட, மருமகளிடையே யார் சுத்தம் செய்வது என்று போராட்டம் நடக்கும்.வேறு வழியில்லாமல் சுகவனம், தானே அந்த அசிங்கங்களை சுத்தம் செய்ய துவங்கினார். எப்பொழுது சுந்தர பாஷ்யம் வாக்கிங் போக வந்தாலும், சுகவனம் பேப்பரை கொண்டு வந்து வீதி குப்பை தொட்டியில் வீசிக்கொண்டு இருப்பார்.

‘‘என்னடா சுக்கு... எப்ப பார்த்தாலும் நான் வர்றச்சே ஆய் எடுத்து போட்டுக்கிட்டு இருக்கே! பேசாம உங்க ஆத்துக்கு ஆய் பாடினு பெயர் வச்சுடு.!’’ சிரிப்பார் சுந்தர பாஷ்யம்.ஒருநாள் வாக்கிங் போகும் போது, சுந்தர பாஷ்யம் திடீரென்று நினைவுக்கு வந்தவராக கூறினார்.

‘‘டேய் சுக்கு! என் பிள்ளையோட ஆறு மாசம் இருந்துட்டு வரலாம்னு அடுத்த வாரம், நானும், கோதையும் அமெரிக்கா போறோம். எனக்கு ஒரு யோசனை! என் வீட்டுல ஒரு சின்ன பொண்ணு வேலை செய்யறா. பெயர் மல்லி. எங்க கிராமத்துல இருந்து அழைச்சுக்கிட்டு வந்தேன். உனக்குதான் நாதியே கிடையாது.

குழந்தைங்க போன ஆய்யை அள்ளி போட கூட ஆளு இல்லை. பேசாம, அந்த பொண்ணை உங்க வீட்டுல வேலைக்கு வச்சுக்க. சம்பளம் யார் தர்றதுனு சண்டை வராம நீயே உன்னோட பென்ஷன்ல இருந்து கொடுத்துடு. உனக்கு பேச்சு துணையா, உன்னோட காரியங்களை கவனிக்கட்டுமே. நாங்க அமெரிக்காவுல இருந்து வர வரைக்கும் உங்க வீட்டுல இருக்கட்டும்...’’ மிக லட்சணமாக இருந்தாள், மல்லி. அகன்ற விழிகளில் நாதியற்று இருக்கிற சோகம் ததும்பினாலும், கூடவே பணிவும் அடக்கமும் எட்டிப் பார்த்தன. கூப்பிய கைகளை அவள் நீக்கவில்லை. சற்று ஒல்லியாக இருந்தாலும் மிக அழகாக இருந்தாள்.

‘‘இவர் வீட்டுலதான் வேலை பார்க்கணும்! உனக்கு ஆட்சேபணை இல்லையே..?’’ சுந்தர பாஷ்யம் கேட்டார்.‘‘எங்கே வேலை பார்த்தா என்னங்க..? நல்ல மனுஷங்க கிட்டே நல்ல பெயரை வாங்கணும். அதை நான் வாங்குவேன்..!’’ சுருக்கமாக பேசினாள் மல்லி.சுந்தர பாஷ்யம் மனைவி கோதையுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஆறு மாதங்கள் விரைவாக ஓடிச் சென்றன.

சென்னை வந்ததும் வாக்கிங் செல்வதற்காக சுகவனத்தை அழைக்க அவர் வீட்டுக்கு வந்தார் சுந்தர பாஷ்யம். ஹாலில் யாருமே இல்லை.
‘‘சுகவனம்... சுகவனம்..!’’ குரல் கொடுத்ததும்தான் தாமதம், சொல்லி வைத்தது போல் நான்கு மகன்களும், மருமகள்களும் ஹாலில் குழுமினர்.‘‘சுகவனம் இல்லை..?’’ வியப்புடன் கேட்டார், பாஷ்யம்.‘‘எங்களைக் கேட்டா... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே! நீங்கதானே அந்த குட்டி மல்லியை கொண்டு வந்து இங்கே விட்டீங்க? அவளோடேயே குடும்பம் நடத்த புறப்பட்டு போயிட்டார், உங்க நண்பர்!’’ கடைசி மகன் தனசேகர்தான்
கூறினான்.

வாக்கிங் போக கூட தோன்றாமல் வீட்டுக்கு திரும்பினார் பாஷ்யம். விஷயத்தை கோதையிடம் சொன்னபோது அவள் நம்பவே இல்லை. சுகவனத்திற்கு போன் செய்தால், சிக்னல் கிடைக்கவில்லை.கிராமத்திற்கு ஏதோ வேலையாக போன பாஷ்யம், அங்கே சுகவனமும், மல்லியும் குடித்தனம் நடத்துவதாக கேள்விப்பட்டு அதிர்ச்சியுடன் அவர்கள் வீட்டுக்கு போனார்.

கதவை தட்டியதும், மல்லிதான் நடக்க முடியாமல் நடந்து வந்து கதவை திறந்தாள். அவளது வயிற்றின் கர்ப்பம் நன்றாகவே புலப்பட்டது.
பாஷ்யத்தை கண்டதும் அவளது கண்களில் சற்றே அதிர்வு. அவரை சோகத்துடன் நோக்கினாள். ‘‘என்னம்மா திருமதி சுக்கு மல்லி! எப்படி இருக்கே..?’’ சற்றே காட்டத்துடன் கேட்ட பாஷ்யத்தின் கண்கள் சுகவனத்தை தேடின.

‘‘அவ கர்ப்பிணி பாவம்... உன்னோட கோபத்தை அவள் கிட்ட காட்டாதே. இங்கே ரூமுக்குள்ள நான் இருக்கேன். வா!’’ சுக்கின் குரல் கேட்க, அந்த அறையினுள் நுழைந்தார், பாஷ்யம்.‘‘என்னடா சுக்கு? ஆய் அள்ளறதுக்கு பொண்ணை கொண்டு விட்டா, அவளையே அள்ளிட்டு வந்துட்டியே!’’ பொரிந்துக் கொட்டினார், பாஷ்யம்.‘‘இரு... அவசரப்படாதே. சுக்கு மல்லி கையால ஒரு சுக்கு மல்லி காபி குடிச்சுட்டு அப்புறம் பேசலாம்...’’
சுக்கு சொல்ல, மல்லி நீட்டிய காபியை எடுத்துப் பருகினார் பாஷ்யம்.

உண்மையிலேயே அந்த காலை வேளையில் சுக்கு காப்பி தொண்டைக்கு இதத்தை தந்தது.காபியை பருகியதும், நண்பனை பார்த்தார், பாஷ்யம்.‘‘காபியில் சுக்கும் மல்லியும் சேர்ந்தா சுவையாத்தான் இருக்கும் சுக்கு. ஆனால், வாழ்க்கையில சேரலாமா? தப்பு இல்லே..? அட்லீஸ்ட் இந்த காரியத்தை செய்யறதுக்கு முன்னை, உன்னோட மனைவி செண்பகத்தையாவது நினைச்சு பார்த்தியா?’’

‘‘டேய் பாஷ்யம்..! நீ கூடவா என்னை சந்தேகப்படறே..? நீ எதுக்காக மல்லியை என் வீட்டுல வேலைக்கு வச்சே..?’’ சுக்கு கேட்டார்.
‘‘குழந்தைகள் ஆய் போனா கூட எடுக்க ஆள் இல்லை. நீ பாவம் எடுத்து போட்டு கஷ்டப்படறியேனு அவளை உன் வீட்டுல வேலைக்குக்கு வச்சேன். ஆனா நீ...’’ பேசிக் கொண்டிருந்த பாஷ்யத்தை நோக்கி கையை உயர்த்தி அமைதிப் படுத்தினார் சுகவனம். ‘‘சரி! என் மருமகளுக்குள்ள என்ன பிரச்னை? அவங்க ஏன் ஆய் எடுக்கலை..?’’‘‘என் குழந்தை போனான்... உன் குழந்தை போனானு அவர்களுக்குள்ளே தகராறு. அதனால எடுக்கலை...’’ பாஷ்யம் சொன்னார்.

‘‘அதேதான் விஷயம்! மல்லி வேலைக்கு வந்தப்புறம் எல்லாம் நல்லபடியாதான் நடந்துகிட்டு இருந்தது. ஒரு நாள், கொல்லைப்புறத்துல திடீர்னு வாந்தி எடுத்துக்கிட்டு இருந்தா. யார் காரணம்னு கேட்டேன். பெயரை சொல்லாம அழுதா. நாலு பிள்ளையில எவனோ ஒருத்தன்னு தெரிஞ்சுது. யாருனு அவங்களை கேட்டேன். நான் இல்லை, நீ இல்லைனு சொன்னாங்க பையன்க.

இது எங்கே போயி வயித்துல வாங்கிட்டு வந்ததோ..! என் புருஷன் இல்லை... உன் புருஷன் இல்லைனு கத்தினாங்க மருமகளுங்க. சரி! வீட்டுல ஆய் கிடக்குது. யார் செஞ்சாங்கன்னு தெரியலை. நான்தானே வீட்டுல ஆய் எடுக்கிற வழக்கம்? அதான் நானே அவளை அழைச்சுக்கிட்டு இங்கே வந்து செட்டில் ஆகிட்டேன். அது என் குழந்தையாகவே இருக்கட்டும் பாஷ்யம்..!’’

பாஷ்யத்திற்கு நகைச்சுவை உணர்வு அதிகம். சிறு வயது முதல் எதற்குமே அழுதது கிடையாது. அவர் கண்ணீர் விட்டதாக சரித்திரமே இல்லை.
முதன்முறையாக சுகவனத்தை கட்டி கொண்டு அழத் தொடங்கினார் பாஷ்யம்.

ராஷ்மிகாவின் ஹோம்!

கார்த்தியின் ‘சுல்தான்’ ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, இந்த லாக் டவுனில் சோஷியல் மீடியாவில் லைவ்வில் வந்தார். அவ்ளோதான். ஒரு குறும்புக்கார ரசிகர் ராஷ்மியிடம், ‘‘நான் உங்க வீட்டை சுத்திப் பார்க்க விரும்புறேன்... சுத்திக் காட்டுவீங்களா?’’ என கேள்வி எழுப்பினார்.
‘‘வீடு என்பது பர்சனல் விஷயம். ஸோ, நோ...’’ என கறாராக பதில் சொல்லிவிட்டார் ராஷ்மி!

ரோஜா வளர்க்கும் ரோஜா!

சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 3’, ஹரியின் ‘அருவா’ என கலக்குகிறார் ராஷி கண்ணா. இந்த லாக் டவுனில் தில்லி வீட்டில் ஹோம் ஸ்டேயில் இருக்கும் அவர் தன் வீட்டு பால்கனியில் வளர்ந்திருக்கும் விதவிதமான ரோஜா செடிகளை ஆசையாக கொஞ்சி மகிழ்ந்திருக்கிறார்.ஒரு ரோஜாவே ரோஜா பூ வளர்க்கிறதே... அடடா ஆச்சரியக்குறி!

லாக் டவுனில் லாக்!

உதயநிதியின் ஹாரர் திரில்லரான ‘ஏஞ்சல்’ மூலம் தமிழுக்கு வருகிறார் டோலிவுட்டை சேர்ந்த பாயல் ராஜ்புத். தலையணை - நியூஸ் பேப்பரால் உடலை மறைக்கும் சேலஞ்ச்களில் இவரே முன்னோடி. தன் ரசிகர்களுக்கு அவரது பில்லர் சேலஞ்ச் கிளுகிளுப்புகள் போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ இப்போது க்ளாமர் காஸ்ட்யூம்களுடன் டிக்டாக்கில் கிறங்கடிக்க ஆரம்பித்திருக்கிறார். குவாரன்டைனில் பாயலிடம் ரசிகர்களும் ‘லாக்’காகி விட்டனர்.

காலச்சக்கரம் நரசிம்மா