மருத்துவமனையில் மூங்கில் கட்டில்!



மூங்கிலும் கரும்பும் அதிகமாக விளைகின்ற ஓர் இடம் அசாம். அங்குள்ள மக்கள் கைவினைப் பொருட்கள் மற்றும் பர்னிச்சர்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே மூங்கில்களைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் கவுகாத்தி ஐஐடியைச் சேர்ந்த ஒரு குழு மருத்துவமனைகளுக்குத் தேவையான படுக்கைகளை மூங்கிலில் தயாரித்து அசத்தியுள்ளது. அடுத்து மூங்கில்களைக் கொண்டு சக்கர நாற்காலியையும் தயாரிக்கப்போகின்றனர்.

அசாமின் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த மூங்கில் படுக்கைகளைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது ஐஐடி. இந்தத் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் இந்தியா முழுவதும் இந்தப் படுக்கைகள் விநியோகிக்கப்படும். இதனால் அசாமில் நிறையப் பேருக்கு வேலை
வாய்ப்புகள் உருவாகும்.

இதுவரை அசாமில் உள்ள ஹெல்த்கேர் நிலையங்கள் எதுவும் மூங்கிலைப் பயன்படுத்தவே இல்லை. ‘‘இன்றைக்குள்ள நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதை வைத்துக்கொண்டு எப்படி பிரச்னைகளைச் சமாளிக்கலாம் என்பதற்கு எங்களின் மூங்கில் படுக்கைகள் ஒரு உதாரணம்...’’ என்கிறார் கவுகாத்தி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர்.

த.சக்திவேல்