ஒர்க் ஃப்ரம் ஹோம் நிரந்தரமாகுமா?



கொரோனா வைரஸ் தாக்குதல் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. குறிப்பாக வேலைச் சூழலில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கடைபிடித்து வந்த ‘வீட்டிலிருந்தே வேலை செய்தல்’ உலகம் முழுவதும் பரவலாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகும் கூட வீட்டிலிருந்தே வேலை செய்வது தொடரும் என பல நிறுவனங்கள் உறுதியாக சொல்லியிருக்கின்றன. ‘‘அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமெரிக்காவில் 2.5 கோடி முதல் 3 கோடிப்பேர் வரை வீட்டிலிருந்தே தங்கள் அலுவலக வேலையைச் செய்வார்கள்...’’ என்கிறது குளோபல் ஒர்க்ப்ளேஸ் அனலிடிக்ஸின் ஆய்வு.

இதுபோக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐ.டி.நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய பரிசீலித்து வருகிறது.
இதனால் வேலையாட்கள் அலுவலகம் வந்து போவதற்கான வாகனப் பயன்பாடுகள் குறையும். போக்குவரத்து குறைவதால் காற்று மாசுபாடு கட்டுப்
படுத்தப்படலாம்.

அதே நேரத்தில் வீட்டிலேயே அலுவலக வேலை பார்ப்பதற்கான ஓர் இடத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு வேலையாட்கள் தள்ளப்படுவார்கள்!

த.சக்திவேல்