உலகின் முதல் டாட்டூ கார்!



‘‘உடலில் டாட்டூ போட்டுக்கொள்வோம். காரில் டாட்டூவா? விளையாடாதீங்க...’’ என்று ‘லெக்ஸஸ்’ நிறுவனம் தனது சொகுசு காரில் டாட்டூ போடப்போவதைப் பற்றிச் சொல்லியபோது பலரும் எழுப்பிய கேள்வி இது. ஜப்பானின் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான ‘டொயோட்டா’வின் ஒரு பிரிவு தான் இந்த ‘லெக்ஸஸ்’. சொன்ன மாதிரியே காருக்கு டாட்டூ குத்தி உலகின் முதல் டாட்டூ காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘லெக்ஸஸ்’.

உடலுக்கு டாட்டூ குத்துவதற்கு அதிகபட்சம் ஒரு வாரம் எடுக்கும். டாட்டூவைப் பொறுத்து சில மணி நேரங்களில் முடிந்துவிடுவதும் உண்டு. ஆனால், காருக்கு டாட்டூ குத்த ஆறு மாதங்களுக்கு மேல் பிடித்திருக்கிறது. டாட்டூ கலைஞர்கள் உடலுக்கு  ஒரு வகையான ஊசியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், காருக்கு டிரில்லிங் மாதிரியான ஒரு டூல் மூலம் டாட்டூ குத்தியிருக்கின்றனர். இந்த அற்புதத்தைச் செய்த டாட்டூ கலைஞர்கள் கிளாடியா மற்றும் யத்தோரா. இருவரும் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. டாட்டூ காரின் விலை சுமார் ரூ.1.11 கோடி!             

த.சக்திவேல்