ஸ்மார்ட் ஊசி



மனிதகுலத்துக்கு முக்கிய எதிரியாக இருப்பது புற்றுநோய். ‘ஆப்பிள்’ நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் இந்தி நடிகர் இர்ஃபான் கான் வரை மரணம் அடைய காரணம் புற்றுநோய்.

மருத்துவமும் அறிவியலும் அனைத்து வகையான புற்றுநோய்களையும் முழுமையாக குணப்படுத்த போராடி வருகின்றன. இருந்தாலும் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காரணம், புற்றுநோய் தீவிரமடைந்த பிறகே பலரும் சிகிச்சை எடுக்க வருகின்றனர். தவிர, புற்று நோய் இருக்கிறதா என்ற சோதனையையும் தாமதமாகவே மக்கள் செய்கின்றனர். அப்படிச் செய்யப்போனால் பயாப்ஸி, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டிய சூழல். இதற்காகும் செலவும் கொஞ்சம் அதிகம்.

இந்நிலையில் புற்றுநோய் இருக்கிறதா... என்பதை தெரிந்துகொள்ள சில நிமிடங்களே போதும் என்றால் பலரும் ஆரம்பத்திலேயே சோதனை செய்ய வருவார்கள். இதற்காகவே பிரத்யேகமாக ஒரு ஸ்மார்ட் ஊசியை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஊசி வந்துவிட்டால் புற்றுநோயைக் கண்டறியும் சோதனை வெகு எளிதாகிவிடும்.

த.சக்திவேல்