சீனாவில் நடக்கும் பிண திருட்டு!



திருமணமாகாத ஆண் இறந்துவிட்டால் அவனைத் தனியாகப் புதைக்கக்கூடாது என்பது சீனாவின் நம்பிக்கை.இதற்காக இறந்த பிணத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெண் பிணத்தைத் தேடிப் பிடிப்பார்கள். இதன் பேர் ‘பிண - மணமகள்’ (Corpse bride). பின்பு இரண்டு பிணங்களையும் சேர்த்து வைத்து சில சடங்குகளை முடித்து அருகருகே புதைத்துவிடுவார்கள்.

இது அங்கே ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்து வரும் ஒரு சடங்கு. இதற்கு தடையிருந்தாலும் சில கிராமங்களில் இன்னும் நடைமுறையில்தான் இருக்கிறது. ஆனால், இந்த சடங்கை நிறைவேற்ற பெண் பிணம் கிடைப்பதில்லை. இந்த சூழலைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அங்கே சில ஏஜென்ட்டுகள் உருவாகிவிட்டனர்.

அவர்களின் தொழிலே பிணத்தைத் திருடிக்கொண்டு வந்து தருவதுதான். ஒரு பிணம் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரை விலை போகிறது.
இப்போது சீனாவில் காவல் நிலையங்களில் பிண திருட்டு வழக்கு அதிகமாக பதிவாகி வருகிறது.

த.சக்திவேல்