கோயில் கோயிலா போறதுதான் என் ஹாபி!



கொஞ்சம் பூமிகா, கொஞ்சம் இஷா கோபிகர் என மிக்ஸிங் ஃபுரூட் ஜூஸாக மிளிர்கிறார் ரியா சுமன். தகதக தங்கத்  தாரகை தமன்னாவுக்கு அடுத்து, சிந்தி ஃபேமிலியிலிருந்து கோலிவுட் வந்திருக்கும் பொண்ணு. ஜீவாவின் ‘சீறு’ ஹீரோயின். சமீபத்தில் சென்னை வந்த ரியா சுமனை சந்தித்தால், கையில் ‘30 நாளில் எளிதாக தமிழ் கற்கலாம்’ புத்தகத்தோடு வரவேற்கிறார்:

‘‘சென்னை ரொம்ப பிடிச்சிருக்கு. மும்பையிலும் இதே வெயில் அடிக்கறதால கிளைமேட் அதேதான். நேத்து மெரீனா பீச்ல வாக்கிங் போயிருந்தேன். இங்கேயும் அதே கடல் காத்துதான் சிலுசிலுக்குது...’’ என தலைகோதி யாரும் கண்டறியாத ரகசியத்தை, தான் அறிந்ததுபோல் புன்னகைக்கிறார் ரியா சுமன்:

‘‘‘சீறு’ ரிலீஸானப்ப மும்பைல இருந்தேன். அங்க ஒரேயொரு தியேட்டர்லதான் தமிழ்ப்படம் போட்டிருந்தாங்க. ‘சீறு’ வெளியான தியேட்டர் எங்க வீட்லயிருந்து பல கிலோமீட்டர் தொலைவுல இருந்தது. அம்மாவோட டிராவல் பண்ணி, படத்தை பார்த்துட்டு வந்தேன்.

தியேட்டர்ல என்னை அடையாளம் கண்டு, அத்தனை பேரும் ஹேப்பியானாங்க. கைகொடுத்து பாராட்டினாங்க. சந்தோஷமான மொமன்ட் அது.
தெலுங்குல ‘பேப்பர் பாய்’ பண்ணும்போது இங்க தமிழ்ல ஜீவாவின் ‘சீறு’வுக்காக கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன்.தமிழ்ல நல்ல நல்ல கதைகள், கன்டன்ட் படங்கள் எடுக்கறதால கோலிவுட்ல படங்கள் பண்ணணும்னு கனவு காண ஆரம்பிச்சுட்டேன். ‘பருத்திவீரன்’, ‘96’, ‘என்ஜிகே’, ‘சூப்பர் டீலக்ஸ்’ல இருந்து சமீபத்திய ‘சைக்கோ’ வரை பார்த்துட்டேன்.

மலையாளத்துல ‘கும்பளாங்கி நைட்ஸ்’ பார்த்தேன். ஆசம். நானும் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். ஸோ, நேட்டிவிட்டி படங்கள் ரொம்பவே பிடிக்குது. கல்ச்சர் பேசும் படங்கள்னா அது ரொம்பவே ஸ்பெஷல். அப்புறம் சூர்யா சார் ஹேண்ட்சமா இருக்கார். விஜய் சேதுபதி சார் க்யூட்டா இருக்கார்...’’ ஹேப்பியாகிறார் ரியா.அதென்ன ரியா..?

அருமையான ஒரு பூவோட மணம்னு அர்த்தம்.  பூர்வீகம் மும்பை. அப்பா சிந்தி. பிசினஸ்மேன். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்துகிட்டே பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சேன். மாடலிங்கும் பண்ணினேன்.காலேஜ் செகண்ட் இயர் படிக்கிறப்ப தெலுங்குல ஆஃபர் வந்தது. ‘நான் ஈ’ ஹீரோ நானி சாரோட ‘மஜ்னு’ல நடிக்கக் கேட்டாங்க. ஏற்கெனவே அவரோட படங்களைப் பார்த்திருந்ததால உடனே கமிட் ஆனேன். ‘மஜ்னு’வுக்குப் பிறகு படிப்புல கவனம் செலுத்தினேன்.

மும்பைல இருக்கற அனுபம்கெர் ஆக்ட்டிங் ஸ்கூல்ல ஆக்ட்டிங் கோர்ஸும் முடிச்சேன். அந்த இன்ஸ்டிட்டியூட்டின் புராஜெக்ட்  ஒர்க்ல  எல்லாம் நான் நடிச்சிருக்கேன். ஃபைனல் இயர் முடிச்ச பிறகு ‘பேப்பர் பாய்’ பண்ணினேன். ஓரளவு தெலுங்கு பிடிபட்டுச்சு. இப்ப கொஞ்சம் தெலுங்கும் தெரியும்.எப்படி இருந்தது ‘சீறு’ அனுபவம்?

சூப்பரா! நான் ஸ்பிரிச்சுவல் பேபி! கோயில் கோயிலா போய் சாமி கும்பிட அவ்ளோ பிடிக்கும். ‘சீறு’ படப்பிடிப்பு டெம்பிள் சிட்டியான கும்பகோணத்துலதான் சில வாரங்கள் நடந்தது. நாங்க தங்கியிருந்த இடத்தை சுத்தி கோயில்கள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயில்னு லிஸ்ட் போட்டு சாமி கும்பிட்டேன்!

அந்த ஏரியா ஃபுட்ஸ் எல்லாம் அமேஸிங். பாயாசம் பிடிச்சிருந்தது. அதோட ரெசிப்பிஸ் கேட்டு நோட் பண்ணி வச்சிருக்கேன்.

ஜீவா சார் ரொம்ப ஃப்ரெண்ட்லி. செட்ல எல்லாரையும் ‘மச்சான்... ப்ரோ’னு அழைப்பார். ‘சீறு’ செகண்ட் ஹாஃப்ல என் போர்ஷன் இருந்தது. படத்தின் லெங்க்த் அதிகமானதால, என் போர்ஷன்ஸை கட் பண்ணிட்டாங்க.

தமிழ்ல ஒரு நல்ல ஹீரோ, நல்ல இயக்குநர் சூழ அறிமுகமானதுல ஹேப்பியோ ஹேப்பி. இதை நல்ல சகுனமா பார்க்கறேன்.

ரொம்ப ஸ்லிம்மா இருக்கீங்களே... டயட் சீக்ரெட்?நத்திங்! இது அம்மா அப்பா கொடுத்த கிஃப்ட். நான் அதிகமா ஃபிட்னஸ் பக்கம் போக மாட்டேன். லிமிட்டான யோகா மட்டும்தான். சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப கட்டுப்பாடா இருப்பேன். எண்ணெய், காரமான அயிட்டங்களைத் தொடமாட்டேன். ஜங் ஃபுட்ஸ்... ம்ஹும்!

ஷாப்பிங் ரொம்ப பிடிக்கும். அதுவும் ரோட்டோரக் கடைகள்ல ஷாப்பிங் பண்ண ரொம்பவும் பிடிக்கும். எங்கே ஷாப்பிங் போனாலும், டிரெஸ், அதுக்கு மேட்ச்சிங்கான அக்சஸரீஸ் வாங்கி குவிச்சிடுவேன்.மும்பைல இருந்து தமிழுக்கு வந்து ஜெயிச்ச ஹீரோயின்ஸ்ல யார் மாதிரி வர விரும்புறீங்க?
தமன்னா, சிம்ரன், ரகுல் ப்ரீத்னு பலரும் இங்க நல்ல பெயர் சம்பாதிச்சிருக்காங்க. அதிலும் சிம்ரன், தமன்னாவின் பேட்டிகளைக் கேட்டிருக்கேன். தமிழ் அழகா பேசறாங்க. அவங்க எல்லாருமே என்னை இம்ப்ரஸ் பண்ணியிருக்காங்க.

ஆனாலும், எனக்கு ஜோதிகா மாதிரி வரணும்னுதான் ஆசை. அழகழகா படங்கள் செலக்ட் பண்ணி நடிச்சிருக்காங்க; நடிக்கறாங்க. அப்படி கதைகள், ஸ்கோப் உள்ள படங்கள்தான் என் சாய்ஸ்!(அதாவது லவ் மேரேஜ் பண்ணி சென்னைல செட்டில் ஆகப்போறாங்க! நோட் பண்ணிக்குங்கப்பா!)

மை.பாரதிராஜா