COFFEE TABLE



10 நிமிடங்களில் 9 ஆயிரம் பேர் பார்த்த வீடியோ

ஒரு ராட்சத பனிப்பாறைக்கு நடுவில் பனிக்கட்டிகள் உடைந்து குளம் போல உருவாகியிருந்தது. அந்தக் குளத்துக்குள் ஒரு நாய் மாட்டிக்கொண்டது.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை ஓர் இளம் பெண் பார்த்துவிட்டார். உடலை உறைய வைக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் அந்தக் குளத்தில் இறங்கி நாயைக் காப்பாற்றிவிட்டார் அந்த இளம் பெண். இந்தக் காட்சியை சுசந்தா என்பவர் டுவிட்டரில் பகிர, 10 நிமிடங்களில் 9 ஆயிரம் பேர் பார்வையிட்டு வைரலாகிவிட்டது அந்த வீடியோ.

செல்ஃபி புள்ள

கோலிவுட்டின் லேட்டஸ்ட் செல்ஃபி புள்ள சர்வநிச்சயமாக ராஷி கண்ணாதான். இன்ஸ்டாவில் 45 லட்சம் ஃபாலோயர்களை வைத்திருக்கும் ராஷி, தனது ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்குத் தாவியிருக்கிறார். புது போனில் விதவிதமான செல்ஃபிகளை எடுத்து மகிழும் பொண்ணு, அதை இன்ஸ்டாவில் தட்டிவிட்டு ஹார்ட்டின்களை அள்ளுகிறது.

ஹை ஹீல்ஸ் ஆபத்து

‘‘ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையும். நிரந்தர முதுகுவலி வரும்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ‘மேக்ஸ் ஹெல்த்கேரி’ன் சர்வே.தில்லியை ஒட்டிய பகுதிகளில் வாழும் 500 பெண்களிடம் ஆய்வு செய்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றனர். அந்தப் பெண்கள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள்.

அதில் 48 சதவீதம் பேர் தினமும் ஹை ஹீல்ஸ் அணிபவர்கள். மற்றவர்கள் வார இறுதியில் மட்டும் அணிபவர்கள்.  
20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே தினமும் ஹை ஹீல்ஸ் அணிகிறார்கள். வார இறுதியில் ஹை ஹீல்ஸ் அணிபவர்களைவிட தினமும் அணிபவர்கள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஹை ஹீல்ஸை பரிசீலனை செய்யுங்கள் லேடீஸ்!

ஸ்மார்ட் டி.வி

மலிவு விலையில் நவீன ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது ‘சாம்சங்’. நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, ஜி5, சோனி லைவ், வூட் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வசதிகள் இதில் இன்பில்ட்டாகவே உள்ளது இதன் ஸ்பெஷல். 1280 X 720 பிக்ஸல் ரெசல்யூசன், 32 இன்ச் மற்றும் 43 இன்ச் என இரண்டு வெரைட்டிகள், மேம்படுத்தப்பட்ட சவுண்ட் குவாலிட்டி, ஸ்லிம் டிஸ்பிளே என அசத்துகிறது இந்த டி.வி. விலை ரூ.12,990-லிருந்து ஆரம்பிக்கிறது.

பெருமை டுவிட்

‘‘பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்’’ என பூரிக்கிறார் தமன்னா. சமீபத்திய மகளிர் தினத்தின் போது படப்பிடிப்பில் இருந்த தமன்னா, கேரவனில் இருந்த மேக்கப் உமன், காஸ்ட்யூமர் என தனது டீமுடன் பெண்கள் தினத்தைப் பற்றி விவாதித்து மகிழ்ந்ததுடன் அந்த ஹேப்பி மொமண்ட்டை வீடியோ பதிவாக இன்ஸ்டாவில் தட்டிவிட்டு லைக்குகளை அள்ளிக் குவித்திருக்கிறார்.

குங்குமம் டீம்