உலகின் மிகப்பெரிய மலர்!
இதோ உலகின் மிகப்பெரிய மலரான ரஃப்லீஸியா ஆர்னால்டி இந்தோனேஷியாவில் மலர்ந்துள்ளது. இதன் விட்டம் மட்டுமே 4 அடி. இவ்வளவு பெரிய மலராக இருந்தாலும் ஏழு நாட்களில் வாடிவிடுகிறது. இதுவரை உலகில் மலர்ந்த மலர்களில் இதுவே பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் அடித்துச் சொல்கின்றனர். அதனால் இந்த மலரை புகைப்படமெடுக்க சுமாத்ரா தீவில் மக்கள் குவிகின்றனர்.
இதற்கு இலையோ, வேரோ கிடையாது. ஒட்டுண்ணியைப் போல வேறொரு செடியில் வளர்கிறது ரஃப்லீஸியா ஆர்னால்டி. அந்தச் செடிக்குக் கிடைக்கும் தண்ணீரையும் வளங்களையும் இது எடுத்துக் கொள்கிறது. ரஃப்லீஸியா ஆர்னால்டி மலரும்போதுதான் இன்னொரு செடியில் இது ஒட்டுண்ணியாக இருப்பதே தெரிய வரும். இந்த மலருக்கு நறுமணம் கிடையாது. இறந்து போன மனித உடலின் மணம் வீசுவதால் பிணமலர் என்றும் இதனை அழைக்கின்றனர்!l
த.சக்திவேல்
|