ரெண்டு!



அக்‌ஷரா மொழி!

‘போகன்’ அக்‌ஷரா கௌடா, தன் பெங்களூரு வீட்டில் மினி லைப்ரரி வைத்திருக்கிறார். எல்லாமே ஆங்கிலப் புத்தகங்கள்தானாம்.
இப்போது கன்னடத்தில் பிசியாக ரவுண்டு கட்டும் அக்‌ஷரா, பொன் மொழிகள் கலெக்‌ஷனும் வைத்துள்ளார்.

‘‘மார்கஸ் லுட்டெரலின் வாசகம் ஒண்ணு பிடிக்கும். No matter how much it hurts, how dark it gets, or how hard you fall... YOU ARE NEVER OUT OF THE FIGHT! - எப்படியிருக்கு..? இதுதான் என் கேரக்டர்...’’ என்கிறார் தெம்பாக!

உருகும் ஐஸ்!

டபுள் குஷியில் பூத்துக்  குலுங்குகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ இந்த காதலர் தினத்தில் வெளியாகும் பூரிப்பு ஒரு பக்கம்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருவது மறுபக்கம்... தவிர, அவரது இந்த பர்த் டே ஸ்பெஷலாக, ‘வானம் கொட்டட்டும்’ யூனிட்டே வாழ்த்து மழை பொழிந்ததிலும் ஐஸ் ஹேப்பி!

தொகுப்பு: மை.பா