வரலாறு சிறப்புமிக்க தத்தெடுப்பு!



அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிளார்க்கின் வயது 5.

அனாதையான இந்த சிறுவனை ஒரு தம்பதியர் வளர்த்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் வளர்ப்புப் பெற்றோர்களே மைக்கேல் கிளார்க்கைத் தத்தெடுத்து நிரந்தர பெற்றோராக முடிவு செய்தனர்.
மைக்கேலைத் தத்தெடுக்கும் நிகழ்வு மிச்சிகனில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் எளிமையாக அரங்கேறியது. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? இந்த நிகழ்வுக்காக தன்னுடன் படிக்கும் 36 மாணவ - மாணவிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்திருந்தான் மைக்கேல்.

அந்த மாணவ மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். அந்த 36 பேரும்தான் மைக்கேல் தத்தெடுக்கப்பட்டிருப்பதற்கான நேரடி சாட்சி. மட்டுமல்ல; தன்னுடன் படிப்பவர்களையும் ஒரு குடும்பமாகப் பாவித்து வந்திருக்கிறான் மைக்கேல். அந்தக் குழந்தைகளின் அன்புக்கு மத்தியில் மைக்கேல் தத்தெடுக்கப்பட்ட நிகழ்வு இணையத்தையே அதிர வைத்திருக்கிறது. ஆம்; தத்தெடுப்பு நிகழ்வுப் புகைப்படம் பல லட்சம் லைக்குகளை அள்ளி வைரலாகிவிட்டான் மைக்கேல்.  

த.சக்திவேல்