நிலவில் மனிதன் வசிக்கப் போகும் நகரத்தின் வரைபடம்!



எவ்வளவு காலம் தான் மனிதன் பூமியையே சுற்றிக் கொண்டிருப்பது? செவ்வாய், நிலான்னு விண்வெளி சுற்றுலாவுக்குப் போக வேண்டாமா?
இப்படி உலகின் பெரும் பணக்காரர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சந்திரனில் மனிதன் குடியேறினால் அவன் வாழப்போகும் நகரம் எப்படியிருக்கும் என்பதை டிஜிட்டலில் வடிவமைத்திருக்கிறார் பேராசிரியர் லூயிஸ் டார்ட்னெல்.

இந்த நிலா நகரத்துக்குப் பெயர் மூன்டோப்பியா. டுவிட்டரில் செம வைரலாகிவிட்டது மூன்டோப்பியாவின் வரைபடம். இந்த நகரம் உருவாக குறைந்தபட்சம் 150 வருடங்களாகும். நிலவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ராட்சத எரிமலைக் குழாய்களால் அங்கே வீடுகள் கட்டியெழுப்பப்படும். மூன்று வருடங்களுக்கு முன்பு 2030ல் நிலாவில் மனித காலனி உருவாக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. l

த.சக்திவேல்