சிறுகதை - தண்டனை



‘‘அதெல்லாம் முடியாது...’’ என்றார் பெரியவர் மம்மூச்சா.‘‘இல்லைங்க... எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’ என்றேன் நான்.‘‘பரவால்ல. நான் சொல்ற வரை அப்படியே இருங்க...’’துபாயில் பணி புரிந்தாலும் அங்கிருப்பதைவிட வாடகை குறைவு என்பதால் ஷார்ஜாவில் தங்கி வேலைக்குப் போகும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் நான்.

குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு புலம் பெயர்ந்து உறவுகளுக்காக வாழும் லட்சக்கணக்கானவர்களிலும் ஒருவன் நான்.அலுவலகமொன்றில் கணக்கராகப் பணிபுரிவதால் குடும்பத்தை அழைத்து வர வாய்ப்பிருந்தாலும் குடும்பத்தை அழைத்து வந்தால் சம்பளம் முழுதும் செலவழிந்து சேமிப்பு இல்லாமல் போய்விடுமென்று வாழ்க்கையை பணத்திடம் அடமானம் வைத்து விட்டுப் புலம்பும் அன்றாடங்களில் ஒருவன்.

சேவல் பண்ணைகள் போல ஒரே அடுக்ககத்தில் பத்துப் பேரோடு அடைந்து வாழும் வாழ்க்கையிலிருந்தாவது விடுபடுவோம் என்று இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககத்தில் ஓர் அறையில் வாடகைக்கு இருக்கிறேன். இது இங்கு வழக்கம்தான். வாடகைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு பகுதியை உள்வாடகைக்கு விடுவது.

கோவாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்கியிருந்த வீட்டில்தான் நான் உள்வாடகைக்கு இருந்தேன். அறைக்கு வெளியே இருந்த சின்ன கழிப்பறை எனக்கானது. அவர்களைக் காண வரும் விருந்தினர்களுக்கும் அதுதான். சிக்கல் சமையலறைதான். காலை ஐந்து முதல் ஏழுவரை சமையலறையை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். எனவே நான் சமைப்பதாக இருந்தால் ஐந்து மணிக்கும் முன்னரே எழுந்தாக வேண்டும். ஏழு மணிக்குப் பின்னரென்றால் அலுவலகம் போகத் தாமதமாகி விடும்.

சுயமாக சமைக்கத் தெரிந்தாலுமே கூட நேரமின்மையும் இந்தச் சூழலும் காரணமாகி விட, கூடவே இரவில் சமைக்க சோம்பலும் சேர்ந்து விட உணவகங்களையே நாட வேண்டிய சூழல்.நான் தங்கியிருக்கும் ‘மஜாஸ்’ பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருந்தன. இந்திய உணவு வகைகள், பாகிஸ்தானிய உணவு வகைகள், லெபனிய உணவு வகைகள் என்று எல்லா வகையான உணவு வகைகளும் விரவிக் கிடந்தன.

இந்திய உணவகங்களில் பெரும்பான்மையாக மலையாளிகள் நடத்தும் உணவகங்கள். கூட்டத்தில் உயர்தர சைவ உணவகமென்ற பெயரிலும் ஒன்று.  வீட்டுக்கு அண்மையில் இத்தனை உணவகங்கள் இருந்தும், எல்லா உணவகங்களிலும் ஏறி இறங்கியும் எதுவும் மனதிற்குகந்ததாக இல்லை.
ஒன்றில் உணவு சரியிருக்காது அல்லது சுத்தமாக இருக்காது. பெரும் கூட்டமாகக் கடமைக்கெனப் பரிமாறப்படும் உணவகங்களோடு மனது ஏனோ உடன்படுவதேயில்லை.

சில உணவகங்களில் நுழைந்தாலே ‘எதற்கு வந்தாய்?’ என்ற மனோபாவத்தோடு அணுகும் அவர்களது உடல்மொழி எனக்குப் பிடிப்பதில்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக அந்த உணவகத்திற்குள் நுழைந்தேன்.

கல்லாவில் அமர்ந்திருந்த முதியவர் தலையிலிருந்து முடி உதிராமல் இருப்பதற்கான வலை அணிந்திருந்த சமையல்காரரிடம் ‘‘ஏன் பரோட்டா அளவு சிறுசா இருக்கு? அம்பது ஃபில்சிலிருந்து ஒரு திர்ஹாமா மாத்தியிருக்கோம். ஒரு திர்ஹாமுக்கு ரெண்டு பரோட்டா தின்னவனுக்கு ஒரு பரோட்டாதான் கொடுக்கப் போறோம். பாதி வயிறுதான் நிறையும் அவனுக்கு. அது அவனோட வயித்தெரிச்சல். அவனுக்கு முக்கால் வயிறு நிரம்புற அளவுக்காவது பெருசா போடு...’’ என்று மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

வாடிக்கையாளர்கள் மீதான அவரது அந்தக் கரிசனை பிடித்திருந்தது. அவரே சட்டென்று இறங்கி வந்து ‘‘என்ன வேண்டும்?’’ என்று கேட்டதும் தேவையானதைச் சொன்னேன்.மலையாளிகளின் உணவகத்தில் மட்டும் நான் கவனித்த விசயம் இது.

கல்லாவில் இருந்தாலும் கடையில் வாடிக்கையாளரைக் கவனிக்க ஆளில்லையென்றால் உடனே களமிறங்கி விடுவார்கள். அது மேசை துடைக்கும் செயலாக இருந்தாலும்.ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்து விட்டது எனக்கு. சிலர் அப்படித்தான். நாமறியாமலே நமக்குள் சிம்மாசனமிட்டுக் கொள்வார்கள். முகலட்சணமென்பது இதுதானோ?

பரோட்டா உடல்நலனைக் கெடுத்து விடுமென்று உலகமே சத்தம் போட்டாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல பரோட்டாவை அவரவருக்கு விருப்பமான கறிகளோடு உண்டு கொண்டிருந்தார்கள். சிலர் உடல் நலத்தைப் பேணுவதாக எண்ணிக்கொண்டு கோதுமை பரோட்டாவும்.

அப்போதுதான் அந்த ஆள் உள்ளே வந்தார். நெடுநாள் வாடிக்கையாளர் தோரணையில், ‘‘ஹாஸிம் எவிடெ?’’ என்றார்.
‘‘இவிட உண்டல்லோ...’’ என்றவாறே சமையலறையிலிருந்து வெளியில் வந்தார் அவர்.
‘‘பெட்டெந்நு ரெண்டு பூரி...’’

‘‘இங்க சாப்பிடவா... கொண்டு போகவா?’’
‘‘கொண்டு போகத்தான்...’’

சரியென்று தலையாட்டி விட்டுத் திரும்பியவர் சமையலறை நோக்கி ‘‘ரெண்டு பூரி...’’ என்று குரலெழுப்ப வாடிக்கையாளர் இடைமறித்து ‘‘ஓயில் கொறச்சு...’’ என்றார்.ஒரு வினாடி கூட இடைவெளி விடாமல் ‘‘பச்சை வெள்ளத்தில் ரெண்டு பூரி...’’ என்று ஹாஸிம் குரலுயர்த்திச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நான் சிரிப்பை அடக்க முடியாமல் நீரைக் கொப்பளிக்கையில் நாசி வழியே நீரேறி எனக்குப் புரையேறி விட்டது.
ஹாஸிம் உடனே ஓடி வந்து ‘‘எந்து பற்றி?’’ என்று கேட்டுக் கொண்டே தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தி, மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்.

எனக்குக் கொஞ்சம் கூச்சமும் வருத்தமுமாக இருக்க ஹாஸிம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நகன்றார்.
சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்கும்போது முதியவர் ‘‘பிரச்னை ஒண்ணும் இல்லையே..?’’ என்று அக்கறையோடு விசாரித்தது எனக்குப் பிடித்திருந்தது.போகிற இடமெல்லாம் அன்பைத் தேடும் மனித மனதினை சுய கழிவிரக்கத்திலிருந்து காப்பாற்றுவதும் இதைப்போன்ற எதிர்பார்ப்புகளற்ற ஆறுதல் மொழிகள்தானே?

‘‘அந்த எருமை மாடு இப்படித்தான் எப்பவும் தமாஷ் பண்ணிட்டே இருப்பான்...’’ என்றார் ஹாஸிமை சுட்டிக்காட்டியவாறே.
ஆனால், எனக்கு ஹாஸிமை வெகுவாகப் பிடித்து விட்டது. பணிச்சூழலை இயல்பான நகைச்சுவையால் மெருகூட்டும் அவரை யாருக்குத்தான் பிடிக்காது?சுற்றி நிறைய உணவகங்கள் இருந்தபோதும் ‘முஸ்தஃபால்’ மட்டும் பிடித்துப் போனதற்கு அவர்களது உணவின் சுவை மட்டுமல்லாமல் சிநேகிதமான இந்நிகழ்வுகளும் காரணமாயிற்று.

உணவகத்தில் நுழைந்த முதல் நாளே இப்படி ஒரு சிறப்பான சம்பவம் நடந்துவிட்டதால் உணவகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் முகம் நன்றாகப் பதிந்துவிட்டது போல. அடுத்தடுத்த நாட்களில் ‘அண்ணனுக்கு என்ன வேணும்..?’ என்பதிலிருந்து ஒரு வார அவகாசத்துக்குள்ளேயே ‘தலைவரா’க்கி இருந்தார்கள் என்னை. நாட்டில் இப்படித்தான் அநாமதேயமாகத் தலைவர்கள் உருவெடுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்புலம் பெயர்ந்து உறவுகளை விட்டு வெகு தொலைவில் வாழ்க்கையில், உணவின்போது அக்கறையோடு பரிமாறுகிறவர்களிடம் இனம் புரியாத ஒரு வாஞ்சை தோன்றிவிடுகிறது இயல்பாகவே.

 ‘முஸ்தஃபால்’ உணவக ஊழியர்கள் இப்படித்தான் நெருக்கமாகிப் போனார்கள்.தொடர்ந்து அங்கேயே சென்றதில் கடையின் உரிமையாளர்தான் அந்த முதியவரென்பதும் முகமது அஸார் என்ற பெயரைச் சுருக்கி மம்மூச்சா என்றழைக்கிறார்கள் என்பதும் அவரது மகன்தான் ஹாஸிம் என்பதும் தெரிய வந்தது. ஹாஸிம் எப்போதும் கலகலப்பாக இருக்க, மம்மூச்சா ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பேசி வாடிக்கையாளர்களிடம் மரியாதையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அவர் ஊருக்குப் போகும் காலத்தில் ஹாஸிம் கல்லாவில் இருந்தால் ‘‘மம்மூச்சா எவிடெ..?’’, ‘‘சாச்சா கிதர் ஹை..?’’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு விசாரணைகள் தொடர்வதைக் கவனித்திருக்கிறேன்.மம்மூச்சா உயரம் குறைவானவரென்பதால் அவரை ஹாஸிம் கிண்டலாக கவாஸ்கரென்றுதான் அழைப்பார்.‘‘நம்முடெ கவாஸ்கர் ஒரு விரமிச்ச தாரம் (ஓய்வு பெற்ற நட்சத்திரம்) கேட்டோ?’’ என்று ஹாஸிம் தன் தந்தையைக் குறித்து கிண்டல் செய்தாலும் அதிலோர் பெருமிதம் நிறைந்திருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் நான் உணவுக்கட்டுப்பாட்டில் ஈடுபடத் துவங்கினேன். உடல் எடையைக் குறைக்க, காலை வேளைகளில் முட்டை மட்டுமே உண்ணத் துவங்கியிருந்தேன். இரண்டு முட்டைகளும் சர்க்கரை இல்லாத தேநீரும் என் காலை உணவுப்பழக்கமாகியிருந்தது.அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்தேன். சமயங்களில் வேலை காரணமாக இரவு தாமதமாகத் திரும்பினால் காலையில் தாமதமாக அலுவலகம் செல்வதை மேலாளர் அனுமதிப்பார்.வழக்கம் போலக் காலை உணவாக இரண்டு முட்டைகளையும் ஒரு தேநீரையும் அருந்தியபின் கல்லா அருகில் சென்றேன்.

சலாம்கள் பரிமாறியதும் ‘‘இன்னைக்கு அலுவலகம் போகலியா?’’ மம்மூச்சாவின் குரலில் எப்போதுமிருக்கும் அதே வாஞ்சை.
‘‘இனிதான் மம்மூச்சா. இன்னைக்கு தாமதமாகப் போகணும்...’’
‘‘என்ன சாப்பிட்ட இன்னைக்கு?’’
‘‘முட்டைதான்...’’‘‘அட என்னப்பா நீ! காலைல நல்லா சாப்பிட்டாத்தானே நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க முடியும்? இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்னை மாதிரி வயசானவங்களுக்குத்தானே?’’நான் மெல்லமாகப் புன்னகைத்தேன்.

‘‘என்னமோ போங்கப்பா. இந்த ஹாஸிமைப் பாரு. 24 மணி நேரமும் தின்னுட்டுத்தானே இருக்கான்...’’
என் புன்னகை சிரிப்பாக மாறியது. சிரித்துக்கொண்டே ஐந்து திர்ஹாம்களை மம்மூச்சாவிடம் கொடுத்தேன். ஒரு திர்ஹாம் திருப்பிக் கொடுத்தார்.
‘‘அஞ்சு திர்ஹாம்தான்...’’‘‘ரெண்டு முட்டையும் சாயாவும் நாலுதான்...’’‘‘இல்லையே... அஞ்சுதான்...’’ என்றேன் நான்மம்மூச்சா பதற்றமாகி, ‘‘ஹாஸிம் எருமை மாடே! இங்க வா...’’ என்றார். ‘‘ரெண்டு முட்டையும் ஒரு சாயாவும் எவ்வளவு?’’

‘‘நாலு திர்ஹாம்...’’‘‘அச்சச்சோ! தப்பாகிடுச்சே...’’ பதறியவர் சட்டென்று கல்லாவிலிருந்து இறங்கி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘‘மாப்பு...’’நான் பதறிப்போய், ‘‘என்னாச்சு மம்மூச்சா?’’ என்றேன்.‘‘நாலு திர்ஹாமுக்குப் பதிலா அஞ்சு வாங்கியிருக்கேனே?’’ அவர் குரலில் வருத்தம்.
‘‘அதனாலென்ன?’’ ‘‘என்னவா..? உழைக்காம வரக்கூடிய வருமானம் ஹராம். எவ்வளவு நாளா அஞ்சு திர்ஹாம் கொடுக்குறீங்கன்னு தெரியுமா?’’
எனக்கும் நினைவில்லை. உணவுக்கட்டுப்பாடு தொடங்கி ஒரு மாதமிருக்கக் கூடும்.

‘‘சரி விடுங்க! நானே கணக்குப் போட்டுக்கறேன். இன்னைலருந்து நான் சொல்லும் வரை நீங்க காசு கொடுக்க வேணாம்...’’ என்றார் மம்மூச்சா
‘‘ஏன்?’’‘‘உங்ககிட்ட கூடுதலா காசு வாங்கியிருக்கேன். தப்பில்லையா? அதை சரிபண்ற வரைக்கும் நீங்க காசு தரவேண்டாம். உங்க கிட்ட காசு வாங்கக் கூடாதுன்னு ஹாஸிம் கிட்டயும் சொல்லி வச்சிடுறேன்...’’எவ்வளவோ சொல்லியும் காசு வாங்க மறுத்து விட்டார். இப்படியே ஒரு வாரம் ஓடிப் போனது. எனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

‘‘இல்லைங்க... எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’அசைந்து கொடுக்கவில்லை மம்மூச்சா.‘‘சரி... நாம ஒரு ஒப்பந்தம் வச்சுக்கலாம். என் கிட்ட காசு வாங்காம இருக்குறதுக்கு பதிலா எங்க அடுக்ககத்துல வேலை செய்ற காவலாளி முத்துவுக்கு உணவு கொடுங்க. சம்மதமா?’’ என்றேன்.‘‘அல்ஹம்துலில்லாஹ்! ஆண்டவன் காப்பாத்திட்டான். இப்படி ஒரு தப்பு செஞ்சிட்டோமே? இதுக்குண்டான அபராதத்ைத எப்படி செலுத்துறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.

அவரும் சாப்பிடட்டும்...’’ என்றார் மகிழ்ச்சியாகஅந்தச் சிறிய உருவத்தின் முன் மேலும் சிறிதானவனாக உணர்ந்தேன். கடையிலிருந்து வெளியேறும் போது மழைத்துளிகள் விழத் துவங்கின.ரசாயனப் பொடி தூவி செயற்கை மழை பெய்விப்பதாக கடந்துபோன சேட்டன் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நம்பவில்லை.

லாலின் லார்ட்!

குடும்பத்தினருடன் நியூசிலாந்து பறந்து வந்திருக்கிறார் மோகன்லால். அங்கே ஹாலிவுட் ‘லார்ட் ஆஃப் ரிங்ஸ்’ படப்பிடிப்பு நடந்த ஸ்பாட்களுக்கு விசிட் அடித்து மகிழ்ந்திருக்கிறார் லாலேட்டன்.

#metoo ஆதங்கம்

பரபரப்பாகக் கிளம்பிய ‘மீ டூ’ நமநமத்துப் போனதில் நொந்துபோயிருக்கிறார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ‘‘‘மீ டூ’ மூவ்மெண்ட் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும்; பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன்.ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பாலிவுட்ல எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தல. ‘மீ டூ’ இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது...’’ என ஆதங்கப்பட்டிருக்கிறார் ஆப்தே!

தங்கப் பெண்!

லண்டன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இசையால் நிரப்பி வருகிறார் ஸ்ருதிஹாசன். அங்கே புகழ்பெற்ற பீஸ்ட் பத்திரிகைக்கும் போட்டோ ஷூட் செய்து மகிழ்ந்திருக்கும் ஸ்ருதியை, ‘இந்தியாவின் தங்கப்பெண் ஸ்ருதி, அவர் இந்த உலகை தன் இசையால் நிரப்புவார்’ என புகழ்ந்து தள்ளியிருக்கிறது அந்த இதழ்.

A நடிகை!

‘கேப்மாரி’க்குப் பிறகு அதுல்யாவைத்தேடி அடல்ட் கன்டன்ட் படங்கள் வரிசை கட்டுகிறதாம்.  இந்நிலையில் அதுல்யாவிடம் ‘‘தடை செய்யப்பட்ட ‘ஏ’ படங்களை நீங்க பார்த்திருக்கீங்களா?’’ எனக் கேட்டால், திகுதிகுக்கிறார்.  ‘‘நார்மலான ‘ஏ’ சர்டிபிகேட் படங்கள்தான் பாத்திருக்கேன். Banned ‘ஏ’ இதுவரைக்கும் பார்த்ததில்ல...’’ என கூலாக எஸ்கேப் ஆகிறார்!

மதுவுக்கு இனி கேப் இல்லை!

பாலாவின் ‘அவன் இவன்’, ‘தூங்காவனம்’ மது ஷாலினி, நீண்ட இடைவெளிக்குப் பின் கோலிவுட் வந்திருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் படத்தைத்தொடர்ந்து அடுத்து சிபி ராஜின் ஜோடியாகிறார். ‘‘நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி எல்லாருமே  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள்தான் பண்றாங்க. அதான் டிரெண்டா இருக்கு. அப்படிக் கதைகளுக்காக காத்திருந்தேன். அதான் இவ்ளோ இடைவெளி. இனிமே கேப் விடமாட்டேன்...’’ என பிராமிஸும் செய்கிறார் மது.

ஆசிப் மீரான்