மின்சார அறுவடை



சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் உள்ள ரூய்செங் கவுண்டி நிலக்கரிக்குப் பிரபலமானது. ‘நிலக்கரிக் கடல்’ என்று கூட ரூய்செங்கை சொல்கின்றனர்.
அங்கே பரந்த வெளியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சோலார் தகடுகளை அமைத்து சூரிய ஒளிக் கதிர்களிலிருந்து மின்சாரத்தை அறுவடை செய்யப்போகிறது சீனா.

இந்த அறுவடை முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும்போது உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையமாக இது மாறலாம். தவிர, உலகளவில் நிலக்கரியைப் பயன்படுத்துவதிலும், கார்பன் வாயுவை வெளியிடுவதிலும் சீனாதான் முதலிடம். இதனால் ஐநா உள்ளிட்ட பல சுற்றுச்சூழல் அமைப்புகளின் பார்வை சீனாவின் மீது விழுந்துள்ளது.

இதன்பொருட்டு சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டிவருகிறது சீனா.தேசிய மின்சார விநியோக அமைப்பிலிருந்து சப்ளை செய்யப்படும் மின்சாரத்தை விட சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கான செலவு மலிவாக உள்ளதாம். தவிர, சோலார் தகடு சந்தையிலும் முன்னணியில் இருப்பது சீனாதான்!

த.சக்திவேல்