யூ டியூப்பை கலக்கும் கொரியச் சிறுமி!



தென்கொரியாவின் தலைநகர் சியோலில் போரம் கீ வாங்கிய ஐந்து அடுக்கு மாடி வீடுதான் இப்போது ஹாட் டாக். இந்த வீட்டின் இந்திய மதிப்பு சுமார் ரூ.55 கோடி! இதிலென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? போரம் கீயின் வயது வெறும் 6தான்.
இந்தச் சிறுமி ‘Boram Tube Vlog’, ‘Boram Tube ToysReview’ என்ற இரண்டு யூ டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில் அவளுக்கு விருப்பமான பொம்மைகளைப் பற்றி பேசுவாள். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவாள். கீழே விழுவாள். எழுந்து அழாமல் சிரிப்பாள்.

இப்படியான சுட்டித்தனங்கள் செய்தே கோடிகளை அள்ளுகிறாள் இந்தக் குட்டிப் பெண்! போரம் கீ தட்டிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வைரலாகி விடுகிறது. இப்போது அவளின் சேனலுக்கு 3.5 கோடி சந்தாதாரர்கள்!              

த.சக்திவேல்