இந்த காரின் வேகம் மணிக்கு 800 கிமீ!



இதோ வந்துவிட்டது உலகின் அதிவேகமான கார். மணிக்கு 800 கிமீ வேகத்தில் செல்கிறது இந்த கார். ‘பிளட்ஹவுண்ட் லேண்ட் ஸ்பீட் ரெக்கார்டு’ என்ற குழு ஸ்டைலாக இதை வடிவமைத்திருக்கிறது. பல வருடங்களாக நிலத்தில் வேகமாக செல்லும் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறது இந்தக் குழு.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் காரை ஓட்டி சோதனை செய்திருக்கிறார்கள். காரின் வேகத்துக்காக ஜெட் விமானத்தின் என்ஜின் மற்றும் அலுமினிய சக்கரங்களை பிரத்யேகமாக டிசைன் செய்திருக்கிறார்கள். அதனால் எந்தவொரு சாலையிலும் தடுமாறாமல் மின்னல் வேகத்தில் பாய்கிறது இந்தக் கார்.

அடுத்த வருடம் தார் சாலையில் ஓட்டி பரிசோதனை செய்யவிருக்கின்றனர். காரைப் பார்ப்பதற்கு குட்டி விமானத்தைப் போலிருக்கிறது. வெறும் 8 நொடிகளிலேயே 200 மைல் வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்தக் கார்தான் நிலத்தின் மீது அதிவேகத்தில் பயணிக்கப்போகும் வாகனம்!l

த.சக்திவேல்