சூப்பர்!



‘நியூஸ் சாண்ட்விச்’ பகுதியில் இடம்பெறும் செய்திகள் சுவையோ சுவை. திருமணத்திற்கான டிக்கெட்டை ஆன்லைனில் விற்கலாம் என்ற தகவல் சூப்பர்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; கருணாகரன், போரூர்; இலக்சித், மடிப்பாக்கம்; கீதா, கோவில்பட்டி; மனோகர், கோவை.

‘கைதி’யை மற்ற இயக்குநர்கள் பார்வையில் கலாய்த்த தொல்(லை)க் காப்பியம் படைத்த தோட்டா ஜெகனுக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.
- பிரேமா குரு, சென்னை;  ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆசிகா, வியாசர்பாடி.

ஐஎஸ்ஐஎஸ்ஸின் அபுபக்கர் அல் பாக்தாதி, தன்னைச் சுற்றி வளைத்த படைகளுக்கு பயந்து உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு உலகெங்குமுள்ள
பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி.
- ஆர்.ஜெ.சி, சென்னை; சந்திரமதி, சென்னை; அமிர் பத்ரா, மடிப்பாக்கம்; பிரேமா பாபு, சென்னை; நஞ்சப்பன், பொள்ளாச்சி; மனோகரன், மேட்டுப்பாளையம்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்.

தீனாவின் பேட்டி தில்லாக கலர்ஃபுல்லாக அவரது அயராத உழைப்பைச் சொன்னது.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ப.மூர்த்தி, பெங்களூரு; நடராஜன், சென்னை.

விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளை முந்துகிற விதத்தில் அது குறித்த திரைப்படங்கள் வந்துகொண்டிப்பது ஓர் ஆரோக்கிய சூழலே.
- கோவிந்தராஜ், தில்லை கங்காநகர்; முரளி, நங்கநல்லூர்; சரண் சுதாகர், வேளச்சேரி; நிலவழகு, நீலாங்கரை; மியாவ்சின், கே.கே.நகர்.
ஓவியர் டிராட்ஸ்கி மருது தனது முதிர்ந்த அனுபவங்களை மனம் விட்டுப் பேசியது மனதைத் தொட்டது.

- சிம்மவாஹினி, வியாசர்நகர்; ரவிக்குமார், பொள்ளாச்சி; கதிரவன், மதுரை; சந்திரமதி, சென்னை; ஆர்.கே.லிங்கேசன், மேல
கிருஷ்ணன்புதூர்; பிரேமா குரு, சென்னை.

நாடக நடிகராக பயிற்சி பெற்று கடின உழைப்பின் மூலம் சினிமா நடிகராக மாறியிருக்கும் ஜார்ஜ் மரியான் ஒரு வாழும் உதாரணம்.
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ப.அண்ணாமலை, திண்டுக்கல்; செம்மொழி, சேலையூர்; பப்பு, அடையாறு; இப்ராகிம், மடிப்பாக்கம்; டி.எஸ்.சேகர், அத்திப்பட்டு; கவுரிநாத், பரங்கிமலை.

இந்நாட்களில் குடும்பத்தில் ஒருவரை மருத்துவராக்குவதே பெரும் கஷ்டம். ஆனால், தனது ஐந்து குழந்தைகளையும் மருத்துவராக்கிய ஜாஸ்மினின் சாதனையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- பிரேமா ராஜ்குமார், குன்னூர்; பி.ஜெயராஜ், சென்னை; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; ஜெயராமன்,கோவிலம்பாக்கம்.

‘இந்தியாவில் அதிகரிக்கும் லாக்அப் மரணங்கள்’ அதிர்ச்சியை அளிக்கிறது.  
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

ரீடர்ஸ் வாய்ஸ்