சைலன்ஸ் ப்ளீஸ்!



கவி பாடும் மன்னர்!

அந்தப் பாடலாசிரியர் வசதியான வீட்டுப் பிள்ளை என்பது கோலிவுட்டினருக்கு தெரிந்த சேதிதான். அவர் பாட்டெழுத வாய்ப்பு வேட்டையாடும் முறையைப் பற்றித்தான் ஏழை பாடலாசிரியர்கள் பலரும் கொத்தாக இப்போது பெருமூச்சு விட்டுச் சொல்கிறார்கள். அந்த பொயட்... உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர்களின் வீட்டிற்கோ அல்லது ஸ்டூடியோவிற்கோ திடீரென ஒரு விசிட் அடிப்பாராம். தன்னைப் பற்றி சிம்பிளாக ஒரு இன்ட்ரோ கொடுக்கும் அவர், பின்னர் ஒரு ‘பை பை’யுடன் அங்கிருந்து நகர்ந்துவிடுவார்.

ஆனால், மறுநாளே அந்த இசையமைப்பாளர் இடத்திற்கு ஒரு காஸ்ட்லி கிஃப்ட் போய்ச் சேர்ந்திருக்கும். அதுவும் சம்பந்தப்பட்ட மியூசிக் டைரக்டரிடம் இல்லாத விலையுயர்ந்த பொருள்!போதாதா... இசையின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுமாம். அப்புறமென்ன? கூப்பிட்டு சிச்சுவேஷனைச் சொல்லிவிடுகிறார்கள். பொயட் எழுவதும் ஹிட் அடிப்பதால்... யாருக்கும் பங்கமில்லை!

நான்கு வேளையும் பிரியாணி!

நடிப்பில் நல்ல பெயரெடுத்த ஹீரோதான் அவர். அவரது ஃபேவரிட் ஃபுட் பிரியாணி. ‘இதெல்லாம் ஒரு மேட்டரா?’ என நீங்கள் நறநறப்பது காதில் விழுகிறது. விஷயமே, தினமும் நான்குவேளையும் பிரியாணி ஆர்டர் செய்து அவர் சாப்பிடுவதுதான்!நோ.... நோ... ஸ்டார் ஹோட்டலில் இல்லை; சாதாரண ஹோட்டலில்தான். என்றாலும் பில்லை செட்டில் செய்வது தயாரிப்பாளர்கள்தான்.

முதலில் எதுவும் தோன்றாத ஒரு புரொட்யூசருக்கு திடீரென்று ஒருநாள் சந்தேகம். நான்கு வேளையும் ஹீரோதான் சாப்பிடுகிறாரா அல்லது அல்லக்கைகள் நாயகன் பெயரைச் சொல்லி ஒரு மொக்கு மொக்குகிறார்களா? சந்தேகத்தை ஹீரோவிடமே கேட்டிருக்கிறார்.அவர் கூலாக, ‘‘நான்தான் சாப்பிடுகிறேன். அதில் உங்களுக்கென்ன டவுட்? என் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க இறைச்சி. அந்தக் கடை பிரியாணி டேஸ்ட்டாக இருக்கும் என்பதால் அங்கு ஆர்டர் செய்கிறேன்...’’ என்றாராம்!

மச்சான்