ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு நடிகை நம்பர் ஒன்னா இருக்காங்க..! அஞ்சலி பொளேர்‘‘ஒரு  பர்ஃபாமரா பெயர் வாங்கவே விரும்புறேன். ஏன்னா அது ஒரு blessed feel. லக்கிலி அப்படி ஒரு நல்ல பெயரையும் சம்பாதிச்சு வச்சிருக்கேன்.

என் முதல் படம் ‘கற்றது தமிழ்’ல ஆனந்தியானது இயல்பா அமைஞ்சது.
அந்த டைம்ல நான் தமிழ் சினிமாவுல நீண்ட தூரம் பயணிக்கணும்னு எந்த ஒரு  ஐடியாவும் இல்லாமத்தான் நடிக்க வந்தேன். ஆனா, முதல் படமே நடிப்புக்கு தீனி போடுற கேரக்டர். அப்புறம் அமைஞ்ச ‘அங்காடித் தெரு’லயும் நல்ல ரோல். அது ஒரு வருஷம் ஷூட் போச்சு.

பர்ஃபாமரா பண்றது ஒரு  ட்ரிக்கி டேலண்ட்னு  புரிஞ்சுகிட்டேன். அப்படி ஒரு பிளாட்ஃபார்ம், தானா  கிடைக்கிறப்ப சரியா பயன்படுத்திக்கணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு.  அடுத்து வந்த ‘எங்கேயும் எப்போதும்’ல பர்ஃபாமன்ஸோட, க்யூட் அண்ட் லவ் மிக்ஸ் பண்ணின மாதிரி கேரக்டர் அமைஞ்சது.

ரொம்பவே செட் ஆன கேரக்டர் அது. அதன்பிறகு அந்த ரூட்ல ட்ராவல் பண்ண ஆரம்பிச்சிட்டேன். தொடர்ந்தும் பர்ஃபார்ம் ரோல்கள் பண்ணவே விரும்புறேன்...’’ ஆனந்தமாகும் அஞ்சலி, இப்போது மாதவன், அனுஷ்கா நடிக்கும் ‘சைலன்ஸ்’, சசிகுமாரின் ‘நாடோடிகள் 2’, விக்னேஷ் சிவன் இயக்கும் வெப்சீரீஸ் என கோலிவுட்டில் பரபரக்கிறார்.

ஜிம் பக்கம் தவமிருக்கறது மாதிரி தெரியுதே?
தவமெல்லாம் இருக்கல. ஜிம் போறது ஹெல்த்தி லைஃப்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்துல ஜிம் போனது ஃபிட்னஸுக்காக. அப்புறம், ஒவ்வொரு படத்துக்கும் அந்த ஃபிட்னஸ் உதவுது. உடம்பை கட்டுக்கோப்பா வைச்சுக்கறதும் முக்கியமில்லையா?

சில நாட்கள் மூணு மணி நேரம் எல்லாம் ஜிம்ல இருந்திருக்கேன். Mood swings இருக்கிறப்ப ஜிம்ல இருந்தா மைண்ட் ஃபிரெஷ்ஷாகிடும். அப்புறம் ரசனையான பாடல்கள் கேட்க பிடிக்கும். காலைல எழுந்திருக்கறப்ப ப்ளே லிஸ்ட்டை ஓட விடுவேன். அது நாள் முழுக்க ஒலிக்கும். என் முதல் படத்தில் யுவன் மியூசிக்கில் ‘பறவையே எங்கிருக்கிறாய்...’னு இளையராஜா சார் பாடினது எப்பவும் ஒலிக்கும்.

இப்ப நடிச்சிருக்கற ‘நாடோடிகள் 2’ல ஜஸ்டின் நல்ல மெலோடிஸ் கொடுத்திருக்கார். அவரோட ‘பண்ணையாரும் பத்மினியும்’ல அத்தனை பாடல்களும்  பிடிக்கும். இப்ப ‘அதுவா அதுவா...’னு அழகா ஒரு பாடல் கொடுத்திருக்கார். அதைத்தான் அடிக்கடி ஹம் பண்ணிட்டிருக்கேன்.
எப்படி வந்திருக்கு ‘நாடோடிகள் 2’?

சூப்பரா! ‘நாடோடிகள்’ எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ஃபர்ஸ்ட் பார்ட்டை விட, இதுல ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கு. இதுல நான் பண்ற செங்கொடி ரோல் பவர்ஃபுல்லான ஒரு கேரக்டர். பொதுவா ஒரு படத்துல கமிட் ஆனதும் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ண மாட்டேன். கதை கேட்கிறப்ப கேரக்டரை உள்வாங்கி ஸ்பாட்டுல டைரக்டர் ஸீன் சொன்னதும் அதை வெளிப்படுத்திடுவேன்.

ஆனா, செங்கொடிக்கு ஹோம் ஒர்க் செஞ்சேன். இயக்குநர் சமுத்திரக்கனி சார் அந்த கேரக்டருக்கு அவ்வளவு ரெஃபரன்ஸ் எனக்கு கொடுத்தார்.  
சசிகுமாரும், சமுத்திரக்கனியும் என்ன சொல்றாங்க?சசிகுமார் சார் ரொம்ப ஸ்வீட்டான கோ-ஆர்ட்டிஸ்ட்.

அமைதியா இருப்பார். கோபமே படமாட்டார். அவர் ஒரு இயக்குநரா இருந்தாலும், சீன்ஸ் எதிலும் தலையிட மாட்டார். இயக்குநரா கனி சார் என்ன சொல்றாரோ அதை அழகா பண்ணிட்டு போயிடுவார். அவங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ரேப்போ இருக்கு.

கனி சாரும் செட்ல கோபப்படமாட்டார். ரொம்ப கூல் ஆக ஹேண்டில் பண்ணுவார். யார்கிட்ட எப்படி வேலை வாங்கணும்னு அவருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. கோலிவுட்ல நீங்க எப்போ டாப் ரேங்க்ல வரப்போறீங்க?அதுல நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுசு புதுசா ஆட்கள் வர்றாங்க. ஒரு வாரம் முதலிடத்தில் இருந்தவங்க அடுத்த வாரம், மூணாவது பொஸிஷனுக்கு போயிடுறாங்க. நாலு படங்கள் ஃப்ளாப் கொடுத்தவங்க, திடீர்னு முதலிடத்துக்கு வந்திடறாங்க. ஸோ, ரேங்க்ல நம்பிக்கை இல்லை.

நமக்கு இந்த பொசிஷன்தான் வேணும்னு யாரும் ரிசர்வ் பண்ண முடியாது. நடிச்ச எல்லா படங்களிலும் நான் என்ன கேரக்டர் பண்ணியிருக்கேன்னு மக்களுக்கு தெரியும். அவுட்டோர் போனா இன்னமும்  என்னை ஆனந்தி, மணிமேகலை, கனினு நான் நடிச்ச கேரக்டர்கள் பெயர்களைச் சொல்லித்தான் கூப்பிடறாங்க. This is my achievement. சந்தோஷமா இருக்கு. எந்த இடத்துல இருக்கப் போறோம்ங்கறதை விட லாங் ரன்ல எப்படி இருக்கப்போறோம் என்பதுதான் முக்கியம்!              

மை.பாரதிராஜா