இன்பத் தொல்லை!ரீடர்ஸ் வாய்ஸ்

‘தொல்(லைக்) காப்பியம்’ தொடக்கமே ஆவலைத் தூண்டுகிறது. வாரா வாரம் இன்பத்தொல்லையை அனுபவிக்கப் போகிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; கவுரிநாத், பரங்கிமலை; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ப.மூர்த்தி, பெங்களூரு; டி.எஸ்.சேகர், அத்திப்பட்டு.

பொங்கல் 2020ல் கூட்டப்படுகிற திரைப்பட அமைச்சரவையில் சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ சிம்மாசனத்தில் அமரப்போவது இப்போதே உறுதியாகிவிட்டது.
- இலக்சித், மடிப்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ப.அண்ணாமலை, திண்டுக்கல்; இசக்கி பாண்டியன், சென்னை; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; நிலவழகு, நீலாங்கரை; எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

‘காஷ்மீர் ரோஜாக்கள்’ என்ற அழகிய தலைப்பில் தேசத்தைத் திரும்பிப்பார்க்க வைத்த பெண்களைப் பற்றிய கட்டுரை பிரமிக்க வைத்தது.
- ப.மூர்த்தி, பெங்களூரு; இராம.கண்ணன், திருநெல்வேலி;  செம்மொழி, சேலையூர்; சைமன் தேவா, விநாயகபுரம்;  பிரேமா பாபு, சென்னை; ஆர்.ஜெ.சி, சென்னை; பப்பு, அடையாறு; இப்ராகிம், மடிப்பாக்கம்; ரா.புனிதவதி, பொள்ளாச்சி.

பிசியான செஃப்பாக இருந்தும், வாசகர்களுக்கான ரெசிபிஸ் கொடுத்த காஞ்சிபுரம் ராஜ்குமார் வாழ்த்துக்
குரியவர்.
- பிரேமா, சென்னை; சந்திரமதி, சென்னை; க.நஞ்சையன், பொள்ளாச்சி;  முகம்மது உஸ்மான், மூலக்கடை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பஞ்சமி நில ஆணை பிறப்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பயனாளிகள் இன்னமும் பஞ்சத்தில் இருந்து வருவது வெட்கப்பட வேண்டிய விஷயமே.
- கவுரிநாத், பரங்கிமலை; ரா.ராஜதுரை, சீர்காழி; டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஜெர்லின், ஆலந்தூர்.

மனைவி மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்த, 61 ஆண்டுகளாக அவருக்குத் தினம் ஒரு டிரெஸ்ஸை பரிசளிக்கும் பாலின் செயல் அசத்தல் ரகம். உண்மையிலே அவர் ‘கலியுக புருஷன்’தான்.
- மகேஸ்வரி, பொள்ளாச்சி; விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி; இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி; கீதா, கோவில்பட்டி; மனோகர், மேட்டுப்பாளையம்; கதிரவன், மதுரை.

பெண்களின் மாதவிலக்கு பிரச்னையைத் தீர்க்க ‘மாங்கு மாங்கு’ எனப் போராடுகிற முருகானந்தம் அருணாச்சலம் ரியலி எ கிரேட் மேன்.
- அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; ப. அண்ணாமலை, திண்டுக்கல்;  ஏஞ்சலின், சென்னை; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; சே.தமிழரசி, சென்னை;
நடராஜன், சென்னை.