பெங்களூருவில் இளையராஜா!யெஸ். பெங்களூரு மாநகர வரலாற்றில் முதல் முறையாக பிரமாண்ட மேடையில் வண்ண வண்ணமயமான ஒளி-ஒலி காட்சிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கும் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை வரும் நவம்பர் 16ம் தேதி நடக்கிறது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடைபெறும் இம்மாபெரும் இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, உஷா உதுப், ஸ்வேதா மேனன், மது பாலகிருஷ்ணன் உட்பட பல முன்னணி பாடகர், பாடகிகள் பங்கேற்கப் போகிறார்கள்.

‘‘நீண்ட காலத்திற்குப் பின் பெங்களூரு ரசிகர்களைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன். பெங்களூரு ரசிகர்கள் விரும்பும் அனைத்து மொழிப் பாடல்களும் நிகழ்ச்சியில் பாடப்படும்...’’ என்கிறார் இளையராஜா. ‘‘50 ஆண்டுகளாக தன் இசையால் நம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறார் இசைஞானி.

அதன் ஒருபகுதியாகத்தான் ‘இசை செலிபிரேட்ஸ் இசை’ என்ற பெயரில்  இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். நவீன தொழில்நுட்பத்தில் மின்விளக்கு  அலங்காரத்துடன் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் நடைபெறும்  இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும்  செய்யப்பட்டுள்ளன...’’ என்கிறார் நிகழ்ச்சி ஏற்பட்டாளரும் அருண் மீடியாஸ் உரிமையாளருமான பி.அருண்.