புயலை எதிர்த்த ஸ்மார்ட் சம்பவம்!



டோரியன் சூறாவளி கிழக்கு அமெரிக்கா, பஹாமாஸ், கிழக்கு கனடா, தெற்கு கிரீன்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் இரண்டு வாரத்துக்கு மேல் ருத்ர தாண்டவம் ஆடியது. அதாவது ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 10 வரை இதன் தாக்கம் இருந்தது. அதிகபட்சமாக மணிக்கு 295 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடமே தெரியாமல் போயின.

எவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற விவரம் துல்லியமாக இன்னும் கிடைக்கவில்லை. 1,300க்கும் அதிகமானோர் காணவில்லை. சுமார் 7 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி.

டோரியன் சூறாவளியின் போது புளோரிடாவைச் சேர்ந்த பாட்ரிக் எல்ரிச் என்பவர் தனது ஸ்மார்ட் காரை காப்பாற்றுவதற்காக சமையலறைக்குள் பார்க் செய்திருக்கிறார். அப்படி பார்க் செய்ததால் அந்த கார் தப்பித்துவிட்டது. இந்த ஸ்மார்ட் சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

த.சக்திவேல்