Foodie Queen-அதிதி ராவ்



ஃபேஷன் சிட்டியான பாரீஸுக்கு சென்று வந்திருக்கிறார் அதிதி ராவ் ஹைதரி. ‘காற்று வெளியிடை’ பொண்ணு. மினுமினு ஸ்கின் விரும்பிகளுக்கு அதிதியின் டயட் & ஃபுட் சீக்ரெட்ஸ் ஒரு கைடு காக்டெயில்.
எப்போதும் ஆர்கானிக் உணவை விரும்பும் அதிதி, சாப்பாட்டில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்வார். மல்லிப்பூ இட்லியை ஒரு பிடிபிடிப்பார். பாதாம் பால் எக்ஸ்ட்ரா டம்ளர் ருசிப்பார்.

மதியம் பிரௌன் ரைஸுடன் சிக்கன், மட்டன். ரொட்டி அண்ட் ஃபிஷ் இருந்தாலும் ஓகே. காய்கறி, பழங்களுக்கு முன்னுரிமை. ஷார்ட்டாக சொன்னால், பொண்ணு ஒரு ஃப்ரெஷ் ஜூஸ் பிரியை!