OMG!



‘‘நியூயார்க்கில் மக்கள் கூடியிருந்த ஓர் இடத்தில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியில் சுட்டதில் இரண்டு பேர் பலி...’’இதுபோன்ற செய்தியை மாதம் ஒரு தடவையாவது படித்துவிடுவோம்.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 8 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்து 62 அப்பாவி மக்கள் இறந்திருக்கின்றனர். இதில் குழந்தைகளும் அடக்கம். இப்படி பொது இடங்களில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் மூன்று பேராவது மரணமடைகின்றனர்.

அதே நேரத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை முப்பது, நாற்பது என்று எகிறுகிறது. அதனால் அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர் பொது நிகழ்வில் கலந்துகொள்ளவே அஞ்சுகின்றனராம்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விசாரித்தால், 79 சதவீத குற்றவாளிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே அப்படிச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கின்றனர். மாஸ் ஷூட்டிங்கை ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல அமெரிக்க இளைஞர்கள் கருதுவதுதான் இதில் ஹைலைட்.

த.சக்திவேல்