Foodie Queen-ரகுல்



வெயிட் லிஃப்ட்டிங் ஒர்க் அவுட்டில் 175 பவுண்ட் எடையை அசாத்தியமாகத் தூக்கி, இறக்கி கெத்து காட்டும் ரகுல் ப்ரீத் சிங், சாப்பாட்டு விஷயத்திலும் ஜிலீர் ஜிலேபி. மதிய உணவில் பிரௌன் ரைஸுடன், சிக்கன், தால், ஃபிஷ், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா என செம வெட்டு வெட்டுவார்.
ஆனால், இரவுச் சாப்பாட்டை ஹெவியாக எடுப்பதில்லை. மாலை ஆறு மணிக்குள் டின்னரை முடித்துக்கொள்வார். உள்ளூரோ, வெளிநாடோ, எங்கே ஷூட் போனாலும் அங்குள்ள ஸ்பெஷல் டிஷ்ஷை தெரிந்துகொள்வார். ரெஸ்ட்டாரன்ட் ஆரம்பிக்கும் ஐடியா இருக்கிறதா ரகுல்?!