வெற்றிமாறன் ப்ளே ஸ்டோர்



கையிலிருப்பது: ஐபோன்.

வீட்டிலிருந்தால்...: Birds lover என்பதால், செல்லக்கிளி ஐரின், பந்தயப் புறாக்களை கொஞ்சி மகிழ்வார்.

வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்: Jiang Rong எழுதிய ‘Wolf Totem’ மற்றும் Alex Haley எழுதிய ‘Roots’.

முதன்முதலில் வாங்கிய பைக்: யமஹா ஆர்.எக்ஸ்.135.

பிடித்த விளையாட்டு: செஸ்.

நல்ல பழக்கம்: ஆங்கில, தமிழ் நாவல்களை இன்றும் வாசித்து வருவது.

மேக்கிங் ஸ்டைல்களில் ஒன்று...: தன் படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டார்.

மனைவி ஆர்த்தியுடன் முதன்முதலில் சேர்ந்து பார்த்து ரசித்த படம்: கமலின் ‘காதலா காதலா’.

பிடித்த இயக்குநர்கள்: அகிரா குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு,  பாலுமகேந்திரா, மணிரத்னம்.

வாவ் தகவல்: மகள் பூந்தென்றலின் ஒரு வருட வளர்ச்சியை வீடியோ பதிவாக வைத்துள்ளார்.

ஒரு சாதனை: தனது ‘அதிர்வு பதிப்பகம்’ மூலம் ‘விசாரணை’ திரைக்கதையையும், ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலையும் கொண்டு வந்திருக்கிறார்!

ஒரு நம்பிக்கை: ‘நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது..!’

மை.பா.