அப்படி````````````````````````யே தலை சுத்திடுச்சு!



சம்பளமே இல்லாத 20 வருட வேலைக்காரரான ‘வாக்கர் ரோபோ’வைப் பற்றிய தகவல்கள் ஆச்சர்யம்.
- ரா.புனிதவதி, பொள்ளாச்சி; மனோகர், கோவை; எஸ்.சண்முகம், திருவண்ணாமலை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; ஜெயசந்திரபாபு, மடிப்பாக்கம்.

‘பேச்சு நம் மூச்சு’ வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது. இவ்வளவு பேச்சுகளையா நாம் பேசுகிறோம் என்று ஒரு நிமிடம் தலை சுற்றியது.
- க.நஞ்சையன், பொள்ளாச்சி; கருணாகரன், போரூர்; மனோகரன், பொள்ளாச்சி; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; பிரேமா, சென்னை; கதிரவன், மதுரை; அமிர்பத்ரா, சென்னை.

அவர் தங்கம் வெல்லமாட்டார் என சந்து முனையில் சிந்துபாடுபவர்களுக்கு பதிலடி தரும்வகையில் உலக பாட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று சாதித்த பி.வி.சிந்துவுக்கு ஒரு பூங்கொத்து
- இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை;  சந்திரமதி, மடிப்பாக்கம்; ஜெர்லின், ஆலந்தூர்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கலிவரதன், கீழ்க்கட்டளை; நிலவழகு, நீலாங்கரை; மனோகர், மேட்டுப்பாளையம்; மகேஸ்வரி, பொள்ளாச்சி; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

காலின்றி வீல் சேரில் வலம் வரும் ராகவி சங்கர் கல்விதான் எங்களுக்கு கால்கள் என்று கூறி படிப்பின் மகத்துவத்தை இந்த உலகத்திற்கு
உணர்த்திவிட்டார்.
- கணேசன், மடிப்பாக்கம்; தா.சைமன் தேவா, விநாயகபுரம்;  த.சத்தியநாராயணன், அயன்புரம்; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; மியாவ்சின், கே.கே.நகர்; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

குஷ்பூ பதில்களில் வாரா வாரம் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கிறது. முதல் மேடைப்பேச்சு பற்றி அவர் விளக்கிய விதம் அருமை.
- டி.எஸ்.சேகர், அத்திப்பட்டு; ரவிக்குமார், பொள்ளாச்சி; எம்.ராஜ், திண்டுக்கல்; சந்திரசேகர், திருப்பூர்; ஜெரிக், சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நாட்களில் ‘விநாயகரை விதைக்கலாம்’ என்ற கட்டுரை மிகவும் சிறப்பு.
- வெ.லட்சுமி நாராயணன்,வடலூர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; த.நரசிம்மராஜ், மதுரை; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் குறித்த கலந்துரையாடல் நல்ல முயற்சி. இனி குழந்தைகள் திரைப்படங்களில் கலக்கும் காலம் வரட்டும்.
- இலக்சித், மடிப்பாக்கம்; பிரேமா, சென்னை; கதிர், மதுரை; மனோகரன், கோவை.

ரீடர்ஸ் வாய்ஸ்