சிரிங்க பாஸ்



“தலைவர் கைல பழத்தை வைச்
சுக்கிட்டுப் பேசறாரே?”
“பழமொழி
சொல்றாராம்!”

“மன்னர் எதுக்காக
நூறு பாட்டில்கள் வாங்கி
வரச் சொன்னார்?’’
‘‘பாட்டில் கேப் சேலஞ்ச் விளையாடிப்
பழகிக்கவாம்!”

“அவர் முகம் சீரியஸா இருக்கே? அப்படி என்ன படிச்சுக்கிட்டிருக்காரு?”
“நான் எழுதின
ஜோக்ஸைத்தான் படிக்கக் கொடுத்தேன்!”

“அவராலதான் உங்க மகன் இன்னிக்கி உயிரோடு இருக்காரா..? அந்த டாக்டர் பேரு என்ன?”
“‘சர்வைவ்’ஸ்வரன்!”

“சங்கத்தமிழ் படிச்சவர்கிட்ட சினிமா பேரை கேட்டது தப்பா போச்சா..?’’
“ஆமா... சிங்கம் ஒன்..
சிங்கம் டூ… சிங்கம் த்ரீ என்பதை முதற்சிங்கம் இடைச்சிங்கம் கடைச்சிங்கம்னு சொல்றாரே!’’

“வேலைக்காரிக்கு அப்படி என்ன டெஸ்ட் கொடுத்து எழுதச் சொன்ன?’’
‘‘கூட்டல் பெருக்கல் கணக்குதான்!”

“நிறையப் பெண்கள் வர்றதால ‘மேல்’ மருவத்தூருக்கு ‘ஃபீமேல்’
மருவத்தூர்னு பேர
மாத்தினா என்ன?!’’

வேமாஜி