சிரிங்க பாஸ்



‘‘உங்கப்பா அரசியல்வாதியா இருக்கலாம். அதுக்காக இப்படியா ‘கோபேக் மாப்பிள்ளை’னு வீட்டு வாசல்ல எழுதி வைக்கறது?!’’

‘‘நீ ஓசி பேப்பர் படிக்கக் கூடாதுனுதானே நாங்க பேப்பர் வாங்கறதையே நிறுத்தினோம்... அப்புறம் ஏன் காலைலயே வந்திருக்க..?’’
‘‘ஆன்லைன்ல பேப்பர் படிக்க உங்க வீட்டு வைஃபை பாஸ்வேர்ட் வேணும்!’’  

‘‘உன் மருமகள் உன்னை மதிக்க மாட்டேங்கறாளா..?’’
‘‘ஆமா. ஃபேஸ்புக்ல என் ப்ரொஃபைல் படத்துக்கு லைக் போட மாட்டேங்கறா!’’

‘‘போர் முடிஞ்சு வந்ததும் மன்னர் குப்புறப் படுத்து தூங்கறாரே... அவ்வளவு களைப்பா?’’
‘‘நீ வேற... எல்லாம் புறமுதுகுப் புண்! மல்லாக்க படுக்க முடியாது!’’

‘‘அட உன் மனைவி வாரத்துல ஒருநாள் மவுன விரதம் இருப்பாங்களா..? கொடுத்து வைச்சவன்யா நீ..!’’
‘‘ம்க்கும். என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அன்னிக்கு அவ கை மட்டும்தான் பேசும்!’’

‘‘மிலிட்டரில இருக்கிற என் மாமா எப்பவும் எனக்கு ஒரு ஃபுல்லோடதான் வருவார்!’’
‘‘கேட்கும்போதே ‘ஃபுல்’லரிக்குது!’’

‘‘மன்னர் போருக்கு தயாராகிறார்னு எப்படி கண்டுபிடிச்ச..?’’
‘‘‘கோட்டையை கோட்டை விட்ட கோமானே!’, ‘புறமுதுகு கண்ட புறநானூறே!’, ‘சரண்டர் சக்கரவர்த்தியே’னு ப்ளெக்ஸ் அடிக்க ஆரம்பிச்சுட்டாரே!’’

கீழை அ.கதிர்வேல்